Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் சண்முக பாண்டியன்… விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்ற படக்குழுவினர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் உடல்நலக் குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள். அவர்களில் சண்முக பாண்டியன் சினிமாக்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

 இதற்கிடையே விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியனும் சினிமாவில் நடிக்கிறார். அவர் அறிமுகமான சகாப்தம் படம் ஓரளவு ஓடியது. இதனையடுத்து இப்போது படைத்தலைவன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

அந்தப் படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். நேற்று விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் படக்குழுவினர் நல்லாசியும் பெற்றனர். சிவகார்த்திகேயனுக்கு பொன்ராம் எப்படி இரண்டு மெகா ஹிட்டுகளை கொடுத்தாரோ அதேபோல் சண்முக பாண்டியனுக்கும் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News