‘கருடன்’ படத்தில் சூரி மற்றும் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.இதில் இயக்குனர் .துரை செந்தில்குமார் , வெற்றிமாறன், நடிகர் சூரி மற்றும் சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய சசிகுமார், சூரிக்கு மேடையில் அறிவுரை ஒன்றை தெரிவித்தார்.வெற்றி விழா எனப்படுவது தற்போது படங்கள் சரியாக ஓடாவிட்டாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் ‘கருடன்’ படத்திற்கு வெற்றி விழா கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார். படத்தின் வெற்றிக்கான காரணங்களை பலரும் கூறுகின்றனர், ஆனால் தயாரிப்பாளர் குமார் தான் முக்கிய காரணம் என சசிகுமார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இனிமேல் சூரியை ‘பரோட்டா சூரி’ என யாரும் அழைக்க மாட்டார்கள். சூரி கதையின் நாயகனாக மாறியுள்ளார். கதையின் நாயகனாக இருக்கும் வரை சூரி நிச்சயம் வெற்றி காண்பார்.ஹுரோ ஆனால் தான் கஷ்டம்.சூரியின் வெற்றி சசிகுமாரின் வெற்றிக்கு சமமாகும் என அவர் கூறினார்.
