இந்தி மற்றும் தெலுங்கில் “தி கோட்” படம் சறுக்க காரணம் என்ன என்று இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கமளித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தி கோட்.” ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் உலகளவில் ரூ.300 கோடி வசூலை நெருங்கிவிட்டது. தமிழில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழில் வசூலுக்கு குறைவில்லை.
ஆனால், இந்தி மற்றும் தெலுங்கில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக, தெலுங்கில் “தி கோட்” படத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஆடியோ வடிவில் உரையாடும் போது, இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “தி கோட்” படத்தில் சி.எஸ்.கே அணியின் காட்சிகளால்தான் இந்தி மற்றும் தெலுங்கில் படம் சரியாக போகவில்லை என நினைக்கிறேன். நான் ஒரு சி.எஸ்.கே அணியின் ரசிகன் என்பதால், பெங்களூரு மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். நான் சி.எஸ்.கே அணியின் ஆதரவாளர் என்பது ரத்தத்தில் ஊறியது. அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது,” என கூறினார் இயக்குநர் வெங்கட்பிரபு.