இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கர சினிமா உலகமே போற்றும் வகையில் சூரியவை வைத்து சூரரைப்போற்று என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார்.இது சூர்யாவின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது.இதனை தொடர்ந்து சூர்யாவும் மற்றும் சுதா கொங்கராவும் புறநானூறு என்ற படத்திற்காக மற்றொரு முறை கூட்டணி அமைத்தார்கள்.
இப்படி கூட்டணி அமைத்ததின் அறிவிப்பு வந்தது மட்டுமே மிச்சம் படப்பிடிப்போ தொடங்கப்பட்டாமல் ஊசலாடி கொண்டு இருக்கிறது.மனதில் பட்டத்தை எல்லாம் அவரவர் பாணியில் இந்த படம் வெளிவராது அப்படி இப்படி என கிளப்பி விட சுதாரித்து கொண்ட சுதா கொங்கராவும் சூர்யாவும் கூட்டாக ஒரு அறிக்கை விட்டார்கள் அதில் புறநானூறு படத்தை இயக்க மேலும் காலம் அவகாசம் தேவைப்படுகிறது என்று.
சரி இப்படத்தின் கதை தான் என்ன? இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நடந்த கதையாகவும் அதில் சூர்யா இந்தி எதிர்ப்புப் போராட்டாத்தில் கலந்துகொண்டு குரல் கொடுப்பவராக கதையை அமைத்துள்ளார் சுதா கொங்கரா.இதற்கேற்றவாறு காட்சிகளை அமெரிக்கன் கல்லூரியில் படம் பிடிக்கலாம் என பார்த்தால் அங்கு கல்லூரி தேர்வும் அதைதொடர்ந்து தேர்தலும் வருவதால் படபிடிப்பை நடந்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார் இயக்குனர்.
அதேசமயம் மும்பை வாசியாக மாறியுள்ள சூர்யா ஜோதிகாவின் விருப்பத்தின் பேரில் ஒரு இந்தி படத்தில் நடிக்க போகிறார்.அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் இருந்தவாறு இந்தி திரைப்படங்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இன்னொருபக்கம் 1960ல் நடந்த மொழி உரிமை போராட்ட காட்சிகளை இன்றைய காலக்கட்டத்தில் படமாக்க மிகப்பெரிய அரங்குகள் செட்கள் அமைத்து அதில் நூற்றுக்கணக்கானவர்களை நடிக்க வைக்க எக்கச்சக்க செலவு பிடிக்கும் என்பதால் பட்ஜெட் எகிறும் என்று கண்டித்துள்ளார்கள். கதைக்கு தேவையான காட்சிகள் பல உள்ளதால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக திரைப்படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக டாப் நட்சத்திரங்கள் நடிக்கும் படம் என்றால் ஒருநாளைக்கு சுமாராக ரூ.35 லட்சம் முதல் 40 லட்சம் வரை செலவாகும் என கணக்கிட்டால் படப்பிடிப்புக்கு மட்டுமே 40 கோடி ஆகும் என்ற பதட்டத்தால் படத்தின் கதையை இரண்டு அரை மணி நேரமாக சுருக்கிய பிறகு படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என சூர்யா தரப்பில் சொல்ல அதற்கு கதையில் கைவைத்தால் கதையின் சாராம்சம் கெட்டுவிடும் என்று சொல்லி இருக்கிறார் சுதா கொங்கரா.அப்படி கதையை சுருக்க வேண்டும் என்றால் அதற்கு மேலும் கால அவகாசம் தேவை என கூறியிருக்கிறார் சுதா கொங்கரா தரப்பு.
இந்தநிலையில் இப்படி மாறி மாறி விவாதங்கள் நடக்க ஷூட்டிங் தேதியை முடிவு செய்ய முடியாமல் அமைதியாக காத்துகொண்டு இருக்கிறது புறநானூறு.