தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றவர், அதன் பிறகு சில படங்களில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு தன்னை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்போது ‘காதி’ என்கிற படம் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைத்துள்ள அனுஷ்கா, அடுத்து ‘காத்தனார்’ என்கிற படத்திலும் நடிக்கிறார். அந்தப் படத்தில் பிரபுதேவா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் அனுஷ்கா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இயங்கி வரும் அரசியல் கட்சியான ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்றும் தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.