Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

அன்று சிங்கிள் இன்று மிங்கிள்… வெகுசிறப்பாக நடந்த பிரேம்ஜி திருமணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர்களில் ஒருவரான கங்கை அமரனுனின் இளைய மகன் பிரேம்ஜி.இவரும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி பல ஆண்டுகளுக்கு கோலிவுட் வட்டாரத்தில் ரவுண்ட் அடித்துக்கொண்டே இருந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

தற்போது மணமகன் பிரேம்ஜிக்கும் மணமகள் இந்துவிற்கும் இன்று ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக சிறப்பாக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் பல திரையுலக பிரபலங்கள் தங்களது திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News