Tuesday, September 17, 2024

அதிரடியாக வெளியான குட் பேட் அக்லி ஃப்ர்ஸ்ட் லுக்! மூன்று மாஸான லுக்கில் அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் அஜித் குமார் குட் பேட் அக்லி என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார்.விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து, குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் உயரும் நிலையில் படத்தின் தலைப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரலாகியது.

இந்தப் படத்தில் மற்ற நடிகர்கள் யாரெல்லாம் நடிக்கின்றனர் என்பதில் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.இந்த சூழலில் குட் பேட் அக்லி படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின்ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அஜித் மூன்று விதமான முக பாவனைகளில் காணப்படுகிறார், ஒன்று அமைதியாகவும், ஒன்று சிரித்தபடியும், மற்றொன்று கோபத்துடன். மேஜையில் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இப்படத்தை மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.ஐதராபாத்தில் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News