Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

விக்ரம் சார்-ஐ அவ்வளவு கொடுமைப்படுத்தினேன்… தங்கலான் இசைவெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனையடுத்து அவர் இப்போது விக்ரமியை ஹீரோவாக வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கும் சூழலில் நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பா.இரஞ்சித் தன்னை பற்றியும் தங்கலான் பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

அவர் பேசுகையில், “விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்த பிறகும் ஒரு சண்டை காட்சியை வைத்தேன். அப்போதெல்லாம் அவரது முகத்தை பார்க்காமல் மானிட்டரில் மட்டும் பார்ப்பேன். ஷாட் முடிந்ததும் எனது உதவி இயக்குநர்களில் யாரையாவது அழைத்து அவருக்கு ஓகேயானு பார்த்துட்டு வாங்க என்று சொல்வேன். அவர்கள் சென்று பார்த்துவிட்டு சார் ஓகே என்று சொல்கிறார் என்பார்கள். ஆனால் அவருக்கு வலித்துக்கொண்டுதான் இருக்கும். நானோ ஓகே சார் இன்னொரு ஒன் மோர் போகலாம் என்று கேட்பேன். அவ்வளவு கொடுமைப்படுத்தினேன். சாரி விக்ரம் சார்.

பார்வதி இங்கு பேசும்போது இரஞ்சித் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் பேசமாட்டார் என்று சொன்னார். அது உண்மைதான். ஏனெனில் இந்தப் படத்துக்காக அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். அந்த உழைப்புக்கு பதிலாக படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் யாரிடமும் பெரிதாக பேசவே இல்லை. யாராவது மயக்கம் போட்டு விழுந்தால்கூட அவர்களை கண்டுக்கமாட்டேன். அந்த அளவுக்கு கருணை இல்லாமல் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்துகொண்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News