Tuesday, November 19, 2024

முடிவுக்கு வருகிறது ஜீ தமிழின் முக்கிய சீரியல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய தொடர்களில் ஒன்று மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடரின் ஆரம்பத்தில் மூத்த நடிகை அர்ச்சனா டைட்டில் ரோலில் நடித்து வந்தார். இதனால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் இடையிலேயே விலகிவிட அதனை தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த மோக்ஷிதாவும் விலகினார். இந்த தொடரானது தற்போது ஒருவழியாக கிளைமாக்ஸை எட்டியுள்ளது. இதனை அந்த தொடரின் நாயகன் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். வெற்றியாக அவர் நடித்துள்ள மானிட்டர் காட்சியை பதிவிட்டு ‘ஐ மிஸ் ஹிம் சோ பேட்லி’ என்று பதிவிட்டுள்ளார். இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியானது வருகிற ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News