நடிகை ரச்சிதா மகாலட்சுமி தமிழில் முதன்முதலாக பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். பொதுவாக ஒரு சீரியல் வெற்றியடைந்து விட்டால் அதில் அடுத்த பாகம் தொடங்குவது வாடிக்கைதான். அதுபோல தான் சரவணன் மீனாட்சி சீரியல் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி அவையும் ஹிட்டாகின. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பல ரசிகர்களை கவர்ந்தார்.
ரச்சிதா இப்போது தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சீரியலில் இனி நீங்க நடிப்பீங்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கூட அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று சிரித்த படியே கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காரணம் ரச்சிதா அதிகமாக புடவை மற்றும் தாவணியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். இது தான் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்தது. ஆனால் தற்போது குட்டி டவுசர் மற்றும் தொளதொளவென ஒரு டிஷர்ட் போட்டு கொண்டு கால் முதல் தொடை வரை தெரியும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் லைக் செய்து வருகின்றனர்.