Monday, November 18, 2024

பெண்கள் அணியில் பற்றிய நெருப்பு… சாச்சனா VS சுனிதா என்ன நடக்க போகிறது இன்று? #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 தொடங்கியபோது 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. புதுமையாக அமைக்க வேண்டும் என்பதற்காக முதல் 24 மணி நேரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டவர் சாச்சனா, இதனால் அவர் மிகுந்த மனவருத்தத்தில் சென்றிருந்தார். அதன் பின்னர், ஒரு வாரம் கழித்து பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தார். அதன்பிறகு, கடந்த இரண்டு வாரங்களாக அவர் நாமினேட் செய்யப்பட்டு வந்தாலும், வாக்குகள் பெற்று வீட்டில் தொடர்ந்து இருக்கிறார். ( இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்களை செய்தியின் இடையில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து காணலாம்)

சில நாட்களாக சாச்சனாவின் வீட்டில் நிலைத்து இருப்பது உறுதியாக இருப்பது தெரிந்தவுடன், அவரின் நெறிமுறையில் மாற்றம் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடக்கத்தில் அவர் நடிகர் விஜய் சேதுபதியை “அப்பா” என்று அழைத்தார், பின்னர் “சார்” என்று அழைக்கத் தொடங்கினார். இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இன்றைய மூன்றாவது ப்ரோமோவில், சாச்சனா பெண்கள் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதில், “நீங்கள் அனைவரும் ஒரே அணியாக சேர்ந்து மற்றவர்களை தவிர்த்து பேசாமல் இருக்கிறீர்கள்,” என்று குற்றம் சாட்டுகிறார். சுனிதா அதற்குப் பதிலளிக்க ஆரம்பித்தபோது, “நீங்கள் பாதியிலே வந்து எதுவும் பேசாதீர்கள்,” என்று சாச்சனா கூறுகிறார்.

இதனால் கோபமடைந்த சுனிதா, “என்னை அக்கா என்று கூப்பிடாதீர்கள், என்னை சுனிதா எனவே அழைக்க வேண்டும். அக்கா எனவும் சுனிதா எனவும் மாறி மாறி கூறுவதால் என் மனதில் சுமையாக உள்ளது,” என கூறினார். இந்த சம்பவம் விளையாட்டு போக்கில் எவ்வித மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Read more

Local News