Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தீவிர ரஜினி ரசிகனாக நடிக்கும் விஜய் சத்யா…வெளியீட்டுக்கு தயாராகும் ‘தில் ராஜா’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் கோவை பாலா மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படத்திற்கு “தில் ராஜா” என்று பெயரிடப்பட்டுள்ளது. சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக விஜய் சத்யா நடித்துள்ளார். இவர் இந்தப் படத்துக்காக சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் திரையில் தோன்றுகிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அம்ரீஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் நெல்லை ஜெயந்தன் மற்றும் கலைகுமார் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மனோ V.நாராயணா மேற்கொண்டுள்ளார், அதேவேளை படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் அர்ஷ் செய்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்தப் படத்தை திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக உருவாக்கி உள்ளனர். நாயகன் விஜய் சத்யா இந்தப் படத்தில் தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. மேலும், பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை இம்மாதம் திரையரங்குகளில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News