கமலஹாசன் தயாரிப்பில் சுருதிஹாசன் இசையமைத்து பாடிய ‘இனிமேல்’ என்ற இசை ஆல்பத்தில் அவருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். அந்த ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் இருவரும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ரொமான்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தான் நடித்த ‘கா’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் ‘இனிமேல்’ இசை ஆல்பம் பற்றி கேட்டது.
“அவர் படத்தின் கதை எழுதும் போது இந்த ரொமான்ஸ் எல்லாம் வரவில்லையா” என்று கிண்டலாக ஆண்ட்ரியா பதிலளித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது.