Tuesday, November 19, 2024

கங்குவா ஆயிரம் கோடி வசூல்! பான் வேர்ல்ட் கன்டென்ட் இருக்கு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இப்படம் ஆயிரம் கோடி நிச்சயம் வசூல் செய்ய வாய்ப்பு என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்து உள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த கங்குவா படத்தை யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்து உள்ளன.தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் என 10 மொழிகளில் மிகவும் பிரமாண்டமாக இப்படம் தயாராகிய கொண்டு இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

கங்குவா திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா இப்படத்தை பெரிதும் எதிர் பார்த்து கொண்டு இருகிறார் படம் வெளியாக இன்னும் ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் அதற்குள்ளாக எல்லா பிஸ்னஸூம் முடிந்து விடும். இந்தி மொழியில் பாகுபலி மற்றும் கே.ஜி.எப் 500 கோடி வசூலித்துள்ளது போல கங்குவா திரைப்படம் ஏன் அந்த வசூலை பெறாது வசூலை பெறும் அந்த அளவுக்கு கங்குவா திரைப்படத்தில் கன்டென்ட் இருக்கிறது என்றார்.

வட இந்தியாவில் நடிகர் சூர்யா அறிந்த முகம் தான் எனவே ஏன் ஒரு மகத்தான வசூலை எதிர்பார்க்க கூடாது ஞானவேல் ராஜா இந்த எதிர்பார்ப்பில் தான் உள்ளார்.கங்குவா படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த மொழியில் வெளியிடலாம் என போன் செய்து கேட்ட வண்ணம் உள்ளனர். கங்குவா திரைப்படத்தின் டீசர் ஆங்கிலத்தில் வெளியான நிலையில் சரிகமப போச்புரி மொழியில் வெளியிட சொல்லிக்கேட்டனர் நான் ஞானவேல் ராஜாவிடம் இதைப்பற்றி சொன்னபோது அவர் அந்த மொழி மட்டும் இன்றி குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா என ஆறு மொழிகளிலும் டப்பிங் செய்ய சொல்லி இருக்கிறார்.அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.இதுவே கங்குவா பட கன்டென்ட் வெற்றியாகும் என்றார்.

உலகளவில் கிறிஸ்டோபர் நோலன் அவர் நாட்டில் நடந்த சம்பவத்தை பயோபிக்காக எடுத்து வெற்றி அடைந்தார்.அவரின் படத்தை அனைவரும் இங்கு பார்க்கிறோம் நம் தமிழ் சினிமாவை ஏன் பான் வேர்ல்ட் படமாக எடுத்து செல்ல கூடாது என்றார். இது தமிழ் சினிமாவில் ஒர்கவுட் ஆகாது என கமெண்ட்ஸ்-ல் சொல்லுவார்கள் அவர்களுக்கு நான் கூறுவது ஒன்று தான் நம்பிக்கை தான் வாழ்க்கை இந்த படத்தை நாம் பான் வேர்ல்ட் படமாக இருக்கும் என்று நம்ப வேண்டும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

Read more

Local News