இந்தப் படத்தின் முதல் பார்வையை அழுத்தமாக வித்தியாசமாக இருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டியிருந்தார்.இப்படத்தை பற்றி மனம் திறந்த இப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து,
அதில் அவர், என் படத்தின் முக்கிய மைய கருத்தே குழந்தையின்மை தான். இந்த பிரச்சனை பல வருடங்களாக நடந்து வருகிறது. ஒரு கட்டத்திலே நம் குழந்தை நாம் நமக்காக பெரும் குழந்தையா? அல்லது சமுதாயம் கொடுக்கும் நெருக்கடியால் நாம் பெற்றுக் கொள்ளும் குழந்தையா என ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடுகிறது. இப்படிப்பட்ட நெருக்கடிகளை கலைத்தாலே திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் என கூறினார்.

மேலும் என் பூர்வீகம் சிவகங்கை, தேவகோட்டை அருகே பள்ளி படிப்பு முடித்து லயோலா கல்லூரியில் முதுகலை படிப்பை முடித்தேன். பிழைப்புக்காக சென்னை வந்த குடும்பம் தான் என் குடும்பம்.வெப்பம் குளிர் மழை படத்தின் சிவகங்கையில் படப்பிடிப்பை நடத்தினோம்.
படிப்பை முடித்து எழுத்து மீது ஆர்வம் வந்து கதை எழுதி ஒரு குறும்படம் இயக்கினேன். கதை மட்டுமே எழுத தெரிந்த எனக்கு வேறு எதுவும் தெரியாது.அப்பொழுது தான் குற்றம் கடிதல் படத்தில் டைரக்டர் பிரம்மாவிடம் துணை இயக்குனராகவும் மற்றும் மகளிர் மட்டும் 2 படத்திலும் வேலை செய்தேன். இப்போது வெப்பம் குளிர் மழை படத்தை இயக்கி உள்ளேன் விரைவில் வெளியாகவுள்ளது.

எப்படி மழை பெய்ய இயற்கை முக்கியமானதாக உள்ளதோ அப்படித்தான் குழந்தை பேர் என்பதிலும் இயற்கை முக்கியமானதாக உள்ளது,என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் எந்தவொரு மருத்துவ அரசியலையும் வாழ்க்கைமுறையை குறை சொல்ல முன்வரவில்லை. குழந்தை பெறுவது என்பதை நெருக்கடியாக மாற்றி சமுதாயத்திற்கானதாக மாற்றுவது என்பதை நிறுத்தினால் தான் இங்கு சமூக மாற்றம் நிகழும்.வெளிநாடுகளிலும் இதே பிரச்சனை இருக்கிறது இதைப்பற்றி அழுத்தமாக வலிமையாக பேசும் படம் தான் இந்த வெப்பம் குளிர் மழை என கூறினார்.