Thursday, April 11, 2024

ஒரு கையெழுத்துக்காக கால்ஷீட் கொடுத்த யோகிபாபு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்க, ஹரிஷ் கல்யாண் – இவானா ஜோடியாக நடிக்கும் படம்,  ‘லெட்ஸ் கெட் மேரீட்’ (எல்.ஜி.எம்.).

மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது யோகிபாபு,  “இந்த படத்தில் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது, ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். பின்னர் தான் உண்மை என்பதே எனக்குப் புரிந்தது.

படத்தில் நதியா மேடம், ஹரிஷ் கல்யாண் போன்றோர் நடிப்பதால் மூவருக்குமான காட்சிகளில் சேர்ந்து நடிக்கும் போது தேதிகளில் குழப்பம் ஏற்படும் என்னால் தேதி ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லையே என்று சொன்னேன்.  இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, நீங்கள் இப்படத்தில் நடிக்க தேதி கொடுத்தால் நான் தோனி கையெழுத்துப் போட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை உங்களுக்கு வாங்கித் தருவேன் என்றார். நான் உடனே என் மேனேஜரைக் கூப்பிட்டு இவர் என்ன தேதி கேட்டாலும் கொடு என்று சொல்லிவிட்டேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News