Thursday, April 11, 2024

யாத்திசை விமர்சனம்: எட்டுத்திசையும் ஒலிக்கட்டும்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யா என்ற வார்த்தை தென் திசையை குறிக்கும்.  ஏழாம்  நூற்றாண்டில் தெற்கு திசையில் வாழ்ந்த பாண்டிய அரசாட்சி குறித்து புனை கதையாக உருவாக்கி இருக்கிறார், தரணி ராசேந்திரன்.

பாண்டிய மன்னன், சோழ பாண்டியர் உள்ளிட்ட மன்னர்களை போரில் வெல்கிறான். சோழர்களுக்கு ஆதரவழஇத்த எயினர் கூட்டம் தப்பித்து, காட்டில் வாழ்கிறது.

எயினர் தலைவன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.. என் சந்ததி நாடில்லாமல் அலையக்கூடாது.. அதற்கு பாண்டியனை கொன்றா நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என சபதம் எடுக்கிறான்.

அவனது சபதம் நிறைவேறியதா.. பாண்டியன் வீழ்ந்தானா என்பதை அத்தனை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தரணி ராஜேந்திரன்.

அனைவரின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, பாடல், எடிட்டிங், காஸ்ட்யும் என தனித்தணியே சொல்ல வேண்டியதில்லை. அத்தனையும்.. அத்தனையும் சிறப்பு!

அரசர் காலத்து கதை என்றாலே ஆடம்பர சிம்மாசனம், உடலெங்கும் தங்கம் என நினைத்துக்கொண்டு இருக்கும் பலருக்கு இந்த படம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். பலவித ஆய்வுகளின் அடிப்படையில் அந்தக் கால தமிழர் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக எடுத்து இருக்கிறார்கள். உண்மையில் அதிர்ச்சி அடையச் செய்வது உண்மைகள்தானே!

கோமணத்துடன், குறைவான ஆடைகளுடனும் அவர்கள் அலைவது, போர் வெறி, போருக்கு முன் மனிதப்பலி என பல வரலாற்று உண்மைகளை கதையூடே சொல்லி இருக்கிறார்கள்.

வீழ்ந்து கிடக்கும் ரத்த உடல்கள், அவை குவியலாக குழிக்குள் தள்ளப்படுவது,  ஒருவனை சுற்றி பலர் நின்று அடித்தே கொல்வது, பெண் போராளி, ‘ஐநூறு பேரை வெல்ல லட்சம் பேருடன் வருகிறான்’ என்கிற வசனங்கள் ஈழத்தை நினைவுபடுத்துகின்றன.

1300 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களிடேயே புழங்கிய சொற்கலை வைத்தே வசனங்களை தீட்டியிருக்கிறார்கள். புதிய முயற்சி.

முயற்சி தோற்கலாம் ஜெயிக்கலாம்.. முயற்சிக்காமல் இருக்கக்கூடாது!

இந்த  முயற்சி வெல்ல வேண்டும்!

யாத்திசை.. எட்டுத்திசையும் முழங்கட்டும்!

- Advertisement -

Read more

Local News