Thursday, April 11, 2024

“வாரிசு படத்தில் நடித்தது ஏன்?” : ராஷ்மிகா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வாரிசு படத்தில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதாமே ஆகிய பாடல்களில் ராஷ்மிகா சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு இல்லையே என்கிற விமர்சனமும் எழுந்தது.

இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். அவர், “வாரிசு படத்தில் எனக்கு ஸ்கோப் இல்லை என்று தெரிந்தே படத்தில் நடித்திருந்தேன். எனக்கு குறிப்பிடத்தக்க கேரக்டர் இல்லை என்பதை தெரிந்துகொண்டுதான் படத்தின் நடித்தேன்.

ஒரு படத்தில் நடிப்பது எனது சொந்த விருப்பம் என்று நினைக்கிறேன், எனக்கு இரண்டு பாடல்கள் இருப்பதாக எனக்குத் தெரியும், அந்த இரண்டு பாடல்களிலும் சரியாக கவனம் ஈர்க்க வேண்டியிருந்தது. அதை நான் சிறப்பாக செய்திருக்கிறேன்.

அதே நேரம் இது குறித்து நான் விஜய் சாரிடம் சென்று ‘இரண்டு பாடல்களைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை’ என்று நான் கூறியிருக்கிறேன். ஆனால், அவருடன் பணியாற்ற விரும்பியதால் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு நடித்தேன்.

ஏனென்றால் எனக்கு விஜய் மிகவும் பிடிக்கும்” என்று ராஷ்மிகா தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News