Tuesday, July 2, 2024

விஜய்சேதுபதி – சேரன் கூட்டணி பிரேக் அப் ஏன்?: சேரன் பதில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர்.  படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் பணப்பிரச்சினையில் சிக்கினார் சேரன். பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சேரன் இயக்கத்தில் நடிக்க விஜய் தேதிகள் வழங்கினார். இதனால், பல மேடைகளில் விஜய் சேதுபதியை மிகவும் பெருமையாகப் பேசினார் சேரன்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது, “இதில் போட்டியாளராகப் போகச் சொன்னது கூட விஜய் சேதுபதிதான்.” என்று நெகிழ்ந்தார்.

ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு,  விஜய் சேதுபதி படத்தை சேரன் தொடங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

இருவரது கூட்டணியில் உருவாகும் படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அந்தப் படம் தொடங்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், அந்த படம் குறித்து சேரனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “விஜய் சேதுபதியின் நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதையை இப்போது மாற்ற வேண்டி இருக்கும். தவிர  அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் தற்போது அந்த படம் பண்ண முடியாது” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News