Friday, April 12, 2024

ஒரே ஷாட்டில் படமாகும் விமல் நடிக்கும் ஹாரர் படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கழுகு-2’ படத்தைத் தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

“1 பந்து 4 ரன் 1 விக்கெட்” படத்தின் இயக்குநரான வீரா இந்தப் படத்தை இயக்குகிறார்..

இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால், இந்தப் படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குநர் வீரா.

இதனால், அவரை கவுரவப்படுத்தும்விதமாக, நன்றிக் கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன்.

வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.

- Advertisement -

Read more

Local News