Friday, April 12, 2024

விமல் – தான்யா ஹோப் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று துவங்கியது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

MIK Prodcutions (P) Ltd நிறுவனத்தின் சார்பில் நடிகர் விமல் மற்றும் இயக்குநர் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி இணையும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது

வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகும் இப்படத்தில் நடிகர் விமல் நாயகனாகவும், நாயகியாக தடம்’, ‘தாராள பிரபு’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 

பல வெற்றிப் படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய வைட் ஆங்கிள்’ ரவிசங்கர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பெயர் பெற்ற கனல்’ கண்ணன் இப்படத்திற்கு சண்டை இயக்கத்தை அமைக்கிறார்.

இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்தப் புதிய படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே.ரித்திஷ் நடித்த ‘நாயகன்’, மற்றும் ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியவர். 

தயாரிப்பு – MIK Productions (P) Ltd, தயாரிப்பாளர் – P.இளையராஜா, எழுத்து, இயக்கம் – குட்டிப்புலி’ சரவண சக்தி, ஒளிப்பதிவு – ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, சண்டை இயக்கம் – கனல்’ கண்ணன், கலை இயக்கம் – ஜெயகுமார், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் – கர்ண ராஜா, புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ் – தர்மராஜ் மாணிக்கம், மக்கள் தொடர்பு – P.தியாகராஜன்.

இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் firstlook போஸ்டரை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News