Thursday, April 11, 2024

எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வாலி, குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கி முத்திரை பதித்தவர்  எஸ்.ஜே.சூர்யா. அடுத்து சில படங்களில் நாயகனாகவும் நடித்தார்.

சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்துகிறார் அவரது தனித்துவ உடல் மொழியிலான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் எதிர்மறை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்தில் வில்லனாக வந்தார். சிம்புவின் மாநாடு படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இதில் அவரது வில்லத்தன நடிப்பு பேசப்பட்டது. தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா-2 படத்தில் லாரன்சுக்கு வில்லனாகவும் நடிக்கிறார்.

ஷங்கர் இயக்கதில் ராம் சரண் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக வில்லன் வாய்ப்புகள் வருவதால் சம்பளத்தையும் ஏற்றி உள்ளாராம்.

- Advertisement -

Read more

Local News