Wednesday, April 10, 2024

கெட்டவார்த்தை பேசும் விஜய்!: இவ்ளோ ஆக்ரோசம் தேவையா விஜய்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

ஏற்கெனவே ஸ்டில்கள் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் நேற்று டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இது குறித்து செய்தியாளர் மணிச்செல்வன் ஒரு வீடியோ பேட்டியில்”  

ஆக்‌ஷன் காட்சிகளைவிட ட்ரெய்லரின் ஆரம்பம் முதல் இறுதி வரை வசனங்களே அதிகம். அதிலும் விஜய் பேசும் வசனங்களே அதிகம். இதில் கெட்ட வார்த்தைகளும் அடக்கம்.

2.43 நிமிடம் ஓடும் ட்ரெய்லரில் போலீஸ் – கிரிமினல் கதை, ஃப்ளாஷ்பேக் காட்சிகள் என கவனிக்க வைக்கின்றன. விஜய்க்கான ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கவல்லவை. மேலும், விஜய் தொடங்கி மிஷ்கின் வரை மிரட்டல் லுக்கில் காட்சியளிக்கின்றனர். முழுக்க முழுக்க காஷ்மீரின் அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடனும், பரபரக்கும் அனிருத்தின் இசையுடனும் ட்ரெய்லர் கவனம் ஈர்க்கிறது.

- Advertisement -

Read more

Local News