Thursday, April 11, 2024

விஜய் சேதுபதியின் ‘மாநகரம்’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘மாநகரம்’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படம் இந்தியில் ‘மும்பைக்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸே, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.  சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மும்பைக்கர்’ திரைப்படம் வருகிற ஜூன் 2-ம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News