Wednesday, April 10, 2024

“வணங்கான் அதிர்வை ஏற்படுத்தும்!”:  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, மற்றும் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம் வணங்கான்.  பாலா இயக்கத்தில் அருண்விஜய் – ரோஷினி பிரகாஷ் ஜோடியாக நடிக்கிறார்கள். சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட பலர்  முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க்,  ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின்  முதல் தோற்ற போஸ்டர்  வெளியிடப்பட்டு வரவேறைப் பெற்றது.

அதில், கிணற்றுக்குள் இருந்து சகதியுடன் வெளியே வரும் அருண் விஜய், ஒரு கையில் பிள்ளையாரையும் மறு கையில் பெரியாரையும் தூக்கி வைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளப் பதிவில், “இயக்குநர் பாலாவின் இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதே போல ‘வணங்கான்’ படத்தில், பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்” என்று தெரிவித்துள்ளார்

- Advertisement -

Read more

Local News