Thursday, April 11, 2024

“நிர்வாணமா நடிக்கணும்னு தெரியாது!”:   விடுதலை பட நடிகை ஓப்பன் டாக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விடுதலை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைக் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள்.

இந்த படத்தில் கதாநாயகியின் பாட்டியாக நடித்தவர் நடிகை தென்றல் ரகுநாதன். இவர் படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், “விடுதலை படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டு பகுதியில் நடந்தது. ஒரு நாள் இரவு 7 மணி அளவில் நான் வெற்றிமாறன் சாரை சந்தித்து பேசினேன். பின் அவர் வந்துவிடுங்கள் என்று சொன்னார். ஆனால், வசனம் பேசுங்கள் என்று என்னை அவர் சோதனை செய்யவில்லை. மறுநாள் நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இந்த படத்தில் முதலில் நடிக்கும் போது எனக்கு என்ன கதாபாத்திரம் என்று தெரியாது.

படப்பிடிப்பு தளத்தில் தான் நான் காவல் நிலைய காட்சியில் ஆடைகள் இன்றி நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்படி நடிக்கும் போது எனக்கு பயமும், தயக்கமும் ஏற்படவில்லை. நான் அங்கு பாதுகாப்புடன் இருப்பதாகவே தான் உணர்ந்தேன். உண்மைய சொல்ல வேண்டும் என்றால், படபிடிப்பில் நான் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக நடிக்கவில்லை. எடிட் செய்துதான் அதுபோல திரையில் காண்பித்து இருந்தார்கள். அதோடு இந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்பது கூட எனக்கு தெரியாது. இந்த படத்தில் டப்பிங் பேசும்போது தான் நான் கதாநாயகியின் அம்மாவாக நடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிந்தது என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News