Thursday, April 11, 2024

வாய்ப்பை மறுத்த இயக்குநர்.. மீண்டும் அரவணைத்த சிவாஜி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரிசூலம். 1978 இல் கன்னடத்தில் ராஜ்குமாரின் சங்கர் குரு படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது.  வி.சோமசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதனை தமிழில் ரீமேக் செய்ய சிவாஜி ஆசைப்பட்டார். அதன்படி படத்தின் உரிமை வாங்கப்பட்டது. சிவாஜியை வைத்து தொடர்ச்சியாக படம் இயக்கி வந்த பி.மாதவன் படத்தை இயக்குவது எனவும் முடிவானது. அந்த நேரம் சொந்தப்பட வேலைகள் காரணமாக, படத்தை இயக்க முடியாது என முன்பணத்தைத் திருப்பித் தந்தார் மாதவன்.

அடுத்து  கே.வியனுக்கு அந்த வாய்ப்பு சென்றது. அவரது இயக்கத்தில் சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, ரீனா, நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், ஜெய் கணேஷ், புஷ்பலதா, எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோர் நடித்தனர்.

உலகம் சுற்றும் வாலிபனுக்கு இசையமைத்த அதே எம்.எஸ்.வி.தான் இசை. அட்டாசமான நான்குப் பாடல்கள்.

1979 ஜனவரி 27 படம் வெளியாகி தமிழகமெங்கும் மகத்தான வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் 11 திரையரங்குகளில் வெள்ளி விழா ஓடியது. அதற்கு முன் எத்தனையோ படங்கள் வெள்ளிவிழா கண்டிருந்தாலும் 9 ஊர்களில் 11 திரையரங்குகளில் அதுவரை எந்தப் படமும் வெள்ளிவிழா ஓடியதில்லை.

திரிசூலம் வாய்ப்பை மறுத்த இயக்குநர் மாதவன் அதன் பிறகு உருவாக்கிய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

தனது படத்தை இயக்க மறுத்தவர் என அவரை புறந்தள்ளாமல், அவர் இயக்கிய ஹிட்லர் உமாநாத் படத்தில் சிவாஜி நடித்தார்.  அதுதான் அவர் நட்புக்கு காட்டிய மரியாதை.

- Advertisement -

Read more

Local News