Thursday, April 11, 2024

துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -





Vijay ajith Shah rukh khan pathaan varisu thunivu
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.

இதனால் அடுத்து பிப்ரவரி மாதம் வரை தமிழில் வேறு எந்த படங்களையும் திரையிட தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழில் அடுத்து புதிய படம் வெளியீடு பிப்ரவரி 3-ந் தேதிதான் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் ஷாருக்கான நடிப்பில் வெளியான பதான் படம் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுக்கும் படமாக இந்த பதான் படம்  அமைந்துள்ளது. இப்படம் உலகம் முழுதும் நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது

அதே போல முதல் நாள் வசூல்  எதிர்பார்த்தது போல இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

 ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகியவை  மட்டுமே வெளியாகி இரு வாரங்கள் ஆகிவிட்டன.  ஆகவே, தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் முன்பதிவு குறைந்துள்ளதால்,  அப்படங்களின்  காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி இருக்கிறது. இதையடுத்து பதான் படத்துக்கு அதிக அளவில் திரையரங்கம் ஒதுக்கப்பட்டும் என திரையுலக புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News