Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sivakumar – Touring Talkies https://touringtalkies.co Thu, 21 Mar 2024 14:54:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sivakumar – Touring Talkies https://touringtalkies.co 32 32 இளையராஜாவின் பயோபிக் விழாவில் கலந்துகொள்ளாத முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/ Thu, 21 Mar 2024 13:22:28 +0000 https://touringtalkies.co/?p=40045 இசைஞானி இளையராஜா பயோபிக் படமாக உருவாகவுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழ் சினிமா உலகினராலும், ரசிகர்களாலும் இசைஞானி என கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது இசை காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ள இசைஞானியின் பயோபிக் குறித்த துவக்க விழா நேற்று நடந்தது நிலையில் இதில் இளையராஜா, தனுஷுடன் உலக நாயகன் கமல், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இசைஞானியின் தீவிர ரசிகரான தனுஷ், இளையராஜாவாக […]

The post இளையராஜாவின் பயோபிக் விழாவில் கலந்துகொள்ளாத முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
இசைஞானி இளையராஜா பயோபிக் படமாக உருவாகவுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழ் சினிமா உலகினராலும், ரசிகர்களாலும் இசைஞானி என கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது இசை காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ள இசைஞானியின் பயோபிக் குறித்த துவக்க விழா நேற்று நடந்தது நிலையில் இதில் இளையராஜா, தனுஷுடன் உலக நாயகன் கமல், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இசைஞானியின் தீவிர ரசிகரான தனுஷ், இளையராஜாவாக நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்பினை கிளப்பியுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த பயோபிக் திரைப்பட துவக்க விழாவில் பலர் கலந்து கொண்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய பிரபலங்களோ கலந்துக்கொள்ளாமல் போனது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இளையராஜாவின் குருக்களில் ஒருவரான டி.வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் இளையராஜாவின் முதல் திரைப்படமான அன்னக்கிளி திரைப்படத்தின் கதையாசிரியர் ஆர்.செல்வராஜ், அத்திரைப்படத்தின் கதாநாயகன் சிவகுமார் அதேபோல் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு, இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா மற்றும் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை‌.இவர்கள் அனைவரும் இளையராஜாவின் வாழ்க்கை பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களும் வகிப்பவர்களும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இளையராஜாவின் பயோபிக் விழாவில் கலந்துகொள்ளாத முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
“சாதி மதத்தைக் கடந்து வாழுங்கள்”: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை https://touringtalkies.co/suriya-speech-in-sivakumar-educational-foundation-event/ Mon, 17 Jul 2023 05:41:38 +0000 https://touringtalkies.co/?p=34423 நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர். இதில் நடிகர் சூர்யா பேசியதாவது: “சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். பிறரை பழி சொல்லுதல், பிறரைப் பற்றி எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும். வீண் சொல், பழி சொல் […]

The post “சாதி மதத்தைக் கடந்து வாழுங்கள்”: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் சூர்யா பேசியதாவது:

“சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். பிறரை பழி சொல்லுதல், பிறரைப் பற்றி எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும். வீண் சொல், பழி சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. கல்வி மூலமாக வாழ்க்கையைப் படியுங்கள். வாழ்க்கை மூலமாக கல்வியைப் படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை. மார்க் மட்டுமே கல்வி அல்ல. அகரம் மூலம் 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் தமிழக அரசுடன் சேர்ந்து பயணிக்கும்போது கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்திருக்கிறது” என்றார்.

The post “சாதி மதத்தைக் கடந்து வாழுங்கள்”: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை appeared first on Touring Talkies.

]]>
முதல் முறையாக திருக்குறளுக்கு பரதம்! : பாராட்டிய சிவக்குமார்! https://touringtalkies.co/for-the-first-time-lakshita-who-is-dance-with-thirukkural-sivakumar-appreciated/ Tue, 27 Jun 2023 06:58:26 +0000 https://touringtalkies.co/?p=33833 தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் நிர்வகிக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால், தான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா என்று பெரிய மனிதர்களுக்கு பிடித்த நபராக வலம் வருகிறார். அவரது மகள் வழி பேத்தி செல்வி.லக்‌ஷிதா […]

The post முதல் முறையாக திருக்குறளுக்கு பரதம்! : பாராட்டிய சிவக்குமார்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் நிர்வகிக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால், தான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா என்று பெரிய மனிதர்களுக்கு பிடித்த நபராக வலம் வருகிறார்.

அவரது மகள் வழி பேத்தி செல்வி.லக்‌ஷிதா மதனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஜூன் 25) சென்னை தியாகராயா நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.

நடிகர் சிவக்குமார், பிரபல பரதநாட்டிய கலைஞர் நிர்த்ய சூடாமணி டாக்டர்.ஸ்ரீனிதி சிதம்பரம், நீதிபதி வெங்கட்ராமன், நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசுகையில் “என் நண்பன் கல்யாணத்தின் பேத்தியாக தான் லக்‌ஷிதா இருந்தாள். ஆனால், இன்று முதல் லக்‌ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்று மாறிவிட்டது. உலம் முழுவதும் லக்‌ஷிதா பேர் வாங்குவார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி இனி லக்‌ஷிதாவின் தாத்தா தான் கல்யாணம் என்று சொல்லும் அளவுக்கு அவள் பின்னிட்டாள்.

அதாவது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடனம் ஆடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, லக்‌ஷிதா நடனம் ஆடவில்லை, மேடையில் பறந்துக்கொண்டிருந்தாள். பானை மீது ஏறி ஆடியபோது நான் சீட் நுணிக்கே வந்துவிட்டேன். என்ன மாதிரி நடனம். பத்து வருடமாக பரதநாட்டியம் ஆடி வருவதாக சொல்கிறார்கள். லக்‌ஷிதாவின் இத்தகைய சிறப்பான நடனத்திற்கு அவருடைய ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பரதநாட்டியம் எலோரிடமும் போய் சேரும் கலை இல்லை, அப்படி இருந்தும் இந்த கலையை இத்தனை வருடம் காப்பாற்றிய ஷீலா உன்னிகிருஷ்ணனை நான் கைகூப்பி வணங்குகிறேன்.

ஏற்கனவே லக்‌ஷிதாவின் இரண்டு அரங்கேற்ற நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். ஆனால், இப்போது நடந்தது ஒரு முழுமையான அரங்கேற்றம் என்று நினைக்கிறேன். ஜனனியின் பாட்டுக்கு லக்‌ஷிதா ஆடுகிறாரா அல்லது இவருடைய நடனத்திற்கு அவர் பாடுகிறாரா என்று தெரியாதவாறு இரண்டுமே ஒரே நேர்கோட்டில் பயணித்து அசத்திவிட்டது. வாத்தியக்குழுவுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடனக் கலைஞர்களுக்கு கண் மிகவும் முக்கியம், நான் ஒரு ஓவியன் என்பதால் கண்ணை பற்றி நன்றாக தெரியும். அந்த வகையில் லக்‌ஷிதாவின் கண்கள் மீனை விட அழகாக இருக்கிறது. அந்த கண்கள் மூலம் அபிநயங்களையும், பாவங்களையும் லக்‌ஷிதா வெளிப்படுத்திய விதம் மிக சிறப்பாக இருந்தது. பாடல்களில் வருவதை விட லக்‌ஷிதா நடனத்தில் காட்டிய நலினம் மிக அழகாக இருந்தது.

இறுதியாக நான் ஒரு விஷயத்தை பாராட்டியாக வேண்டும். நான் நிறைய பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். பெரும்பாலும், அறிமுகப்படுத்தும் போது ஆங்கிலத்தில் தான் சொல்வார்கள். ஆனால், இங்கு அனைத்து பாடல்களையும் தமிழில் சொல்லி, தமிழில் விளக்கும் கொடுத்தது பிராமாதமாக இருந்தது. இப்படி தான் செய்ய வேண்டும். நிறைய பேருக்கு ஆங்கிலம் புரியாது, எனக்கு கூட தான், அதனால் இதுபோல் தமிழில் பாடல்களையும், அதன் விளக்கங்களையும் சொல்லும் போது என்னைப் போன்றவர்களாலும் ரசிக்க முடியும். மிக சிறப்பான முயற்சி இது, நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

சமீபத்தில் நான் பார்த்த பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக லக்‌ஷிதாவின் அரங்கேற்றம் அமைந்திருக்கிறது. இதை அரங்கேற்றம் என்று சொல்வதை விட ஒரு முழுமையான பரதநாட்டிய நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். மிக சிறப்பாக இருந்தது. லக்‌ஷிதாவின் ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

The post முதல் முறையாக திருக்குறளுக்கு பரதம்! : பாராட்டிய சிவக்குமார்! appeared first on Touring Talkies.

]]>
கமலுக்கு 90 நாள்.. ரஜினிக்கோ மூன்ற நாள்! https://touringtalkies.co/actor-sivakumar-reveals-about/ Wed, 15 Mar 2023 15:05:00 +0000 https://touringtalkies.co/?p=30723 சமீபத்தில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற சிவகுமார் ஒரு சில விஷயங்களை பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார். “ பாரதிராஜா இயக்கத்தில் கமல் மற்றும் ரஜினிகாந்த் நடித்த பதினாறு வயதினிலே திரைப்படத்தில் கமல் ஹீரோவாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். கமல் கிட்டத்தட்ட  மூன்று மாதங்களாக அந்த சப்பானி கதாபாத்திரத்தில் கஷ்டப்பட்டு நடித்தார். ஆனால் […]

The post கமலுக்கு 90 நாள்.. ரஜினிக்கோ மூன்ற நாள்! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற சிவகுமார் ஒரு சில விஷயங்களை பற்றி மனம் திறந்து பேசினார்.

அப்போது நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.

“ பாரதிராஜா இயக்கத்தில் கமல் மற்றும் ரஜினிகாந்த் நடித்த பதினாறு வயதினிலே திரைப்படத்தில் கமல் ஹீரோவாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். கமல் கிட்டத்தட்ட  மூன்று மாதங்களாக அந்த சப்பானி கதாபாத்திரத்தில் கஷ்டப்பட்டு நடித்தார். ஆனால் ரஜினி பரட்டை எனும் கதாபாத்திரத்தில்  மூன்று நாள் மட்டுமே நடித்தார். அதுவும் ஹீரோயினை வன்கொடுமை செய்யும் வில்லனாக நடித்திருப்பார்.

ஆனால் படம் ரிலீசான போது ஹீரோவாக நடித்த கமலைவிட,   பரட்டையாக நடித்த ரஜினிகாந்தை அதிகமாக கொண்டாடினர். அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது.

அதே போல புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் எனக்கு பெரிய கேரக்டர். ரஜினிக்கு சிறிய கதாபாத்திரம். ஆனால், அவரது கதாபாத்திரம்தான் அதிகமாக பேசப்பட்டது.

ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக ஆக வேண்டும் என்பது அவர் தலையில் எழுதப்பட்ட எழுத்து.  அதை யாராலும் மாற்றி இருக்க முடியாது” என்றார்.

 

The post கமலுக்கு 90 நாள்.. ரஜினிக்கோ மூன்ற நாள்! appeared first on Touring Talkies.

]]>
எம்ஜிஆர் குறித்து சிவகுமார் நெகிழ்ந்த சம்பவம்! https://touringtalkies.co/incident-shared-by-sivakumar-about-mgr/ Thu, 12 Jan 2023 05:51:00 +0000 https://touringtalkies.co/?p=29421 நடிகர் சிவகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.அவர், “மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்றாலே பிறருக்கு வாரி வழங்குபவர் என்று அனைவருக்கும் தெரியும். புகழ் பெற்ற நடிகராக இருந்தபோதும், முதலமைச்சர் ஆன பிறகும்.. இறுதிவரை அப்படித்தான் இருந்தார். அப்போதெல்லாம் அவர் செல்வாக்காக இருந்த காலகட்டம். ஆனால் பெரிய அளவு செல்வாக்கு இல்லாத நிலையிலேயே பிறகுக்கு அள்ளித்தரும் வள்ளலாகவே இருந்தார். அவர், திரையுலகில் ஓரளவு பிரபலமடைந்து இருந்த நேரம். அப்போதே […]

The post எம்ஜிஆர் குறித்து சிவகுமார் நெகிழ்ந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிவகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர், “மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்றாலே பிறருக்கு வாரி வழங்குபவர் என்று அனைவருக்கும் தெரியும். புகழ் பெற்ற நடிகராக இருந்தபோதும், முதலமைச்சர் ஆன பிறகும்.. இறுதிவரை அப்படித்தான் இருந்தார். அப்போதெல்லாம் அவர் செல்வாக்காக இருந்த காலகட்டம். ஆனால் பெரிய அளவு செல்வாக்கு இல்லாத நிலையிலேயே பிறகுக்கு அள்ளித்தரும் வள்ளலாகவே இருந்தார்.

அவர், திரையுலகில் ஓரளவு பிரபலமடைந்து இருந்த நேரம். அப்போதே அவரது வள்ளல் குணம் மக்களை சென்றடைந்து இருந்தது. ஆகவே தினமும் யாராவது சிலர் வந்து உதவி கேட்டு நிற்பார்கள். ஸ்டுடியோவில் இருந்து அவர் கார் வெளியே வந்ததும் சூழ்ந்து கொள்வார்கள்.
• காரில் வலம் வந்தாலும், முக்கியமான நடிகராக வளர்ந்துகொண்டு இருந்தாலும் பொருளாதாரத்தில் பெரிய அளவில் அவர் வளராத காலம் அது. ஆனாலும் தன்னை நம்பி வருவர்கள் ஏமாந்து விடக்கூடாது என நினைத்து, தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்துவிடுவார். அதனால்தான் அவர் எட்டாவது வள்ளல் என போற்றப்படுகிறார்” என நெகிழ்ந்து கூறினார் சிவகுமார்.

The post எம்ஜிஆர் குறித்து சிவகுமார் நெகிழ்ந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
“என்னை நானே…!”: டென்சன் ஆன சிவகுமார் https://touringtalkies.co/actor-sivakumar-thirukural/ Sun, 08 Jan 2023 09:31:43 +0000 https://touringtalkies.co/?p=29318 மகாபாரதம், ராமாயணம் ஆகியவை குறித்து சிறப்பாக சொற்பொழிவு ஆற்றி கவனத்தை ஈர்த்தார் நடிகர் சிவகுமார். அடுத்து, திருக்குறளில் உள்ள நூறு  குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ப வாழ்ந்த மனிதர்கள் பற்றியும், நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பேசினார். இந்த உரை, பொங்கல் பண்டிகையை ஒட்டி புதிய தலைமுறை தொலைக் காட்சியில் மூன்று நாட்கள், மூன்று பகுதிகளாக ஒளிபரப்பாக இருக்கிறது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  அந்த உரை ஒளிபரப்பப்பட்டது. மிகச் சிறப்பான உரை. அனைவரும் […]

The post “என்னை நானே…!”: டென்சன் ஆன சிவகுமார் appeared first on Touring Talkies.

]]>
மகாபாரதம், ராமாயணம் ஆகியவை குறித்து சிறப்பாக சொற்பொழிவு ஆற்றி கவனத்தை ஈர்த்தார் நடிகர் சிவகுமார். அடுத்து, திருக்குறளில் உள்ள நூறு  குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ப வாழ்ந்த மனிதர்கள் பற்றியும், நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பேசினார்.

இந்த உரை, பொங்கல் பண்டிகையை ஒட்டி புதிய தலைமுறை தொலைக் காட்சியில் மூன்று நாட்கள், மூன்று பகுதிகளாக ஒளிபரப்பாக இருக்கிறது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  அந்த உரை ஒளிபரப்பப்பட்டது. மிகச் சிறப்பான உரை. அனைவரும் ரசித்தனர்.

பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் சிவகுமார்.

அப்போது, ஒரு செய்தியாளர், “குறள் நெறிக்கு ஏற்ப வாழ்ந்த நூறு பேர் பற்றி பேசியிருக்கிறீர்கள். சிறப்பாக இருந்தது. நீங்களும் அப்படித்தான் வாழ்கிறீர்கள். அந்த வாழ்க்கை அனுபவத்துடன் குறளை ஒப்பிட்டு பேசலாமே” என்றார்.

இதற்கு ஏனோ சிவகுமார் டென்சன் ஆகிவிட்டார். அவர், “என்னைப் பற்றித்தான் ஒரு குறள் சொல்லி இருக்கிறேனே. ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற என் அனுமதி இல்லாமல் ஏராளமான பேர் செல்பி எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தட்டிவிட்டேன். உடனே, கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என் மீதுதான் தவறு. பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம்தான் கோபத்தைக் காண்பிக்க வேண்டும்.  மற்றவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது.

அன்று நான் தவறு செய்துவிட்டேன். அதற்காகத்தான்,   என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்வது போல, ஒரு அத்தியாத்தை இந்த உரையில் சேர்த்து இருக்கிறேன்.

இதற்குப் பொருத்தமாக, செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்? என்ற குறளை சுட்டிக்காட்டி உள்ளேன்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

அவரது திடீர் ஆதங்கம் அரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

The post “என்னை நானே…!”: டென்சன் ஆன சிவகுமார் appeared first on Touring Talkies.

]]>
நஷ்டத்தில் இருந்த தேவர் பிலிம்ஸ் ஸ்ரீபிரியாவால் மீண்டது..! https://touringtalkies.co/devar-films-which-was-in-loss-recovered-with-sripriya/ Wed, 26 Oct 2022 19:01:52 +0000 https://touringtalkies.co/?p=26071 தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக 1970 களில் வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. சினிமாவின்  உச்சத்தில் இருந்த  ஜாம்பவான்களின் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.இவர் தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்கள் என 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதன் முதலில் ‘ஆண் பிள்ளை சிங்கம்’ என்ற படத்தில் சிவகுமாருக்கு நாயகி அறிமுகமானார் அவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது பிரபலமாக இருந்த தேவர் […]

The post நஷ்டத்தில் இருந்த தேவர் பிலிம்ஸ் ஸ்ரீபிரியாவால் மீண்டது..! appeared first on Touring Talkies.

]]>

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக 1970 களில் வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. சினிமாவின்  உச்சத்தில் இருந்த  ஜாம்பவான்களின் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.இவர் தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்கள் என 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டும் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதன் முதலில் ‘ஆண் பிள்ளை சிங்கம்’ என்ற படத்தில் சிவகுமாருக்கு நாயகி அறிமுகமானார்


அவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது பிரபலமாக இருந்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம் எதிர்பாராத விதமான நஷ்டத்தில் இயங்க தொடங்கியது. இந்த சூழ்நிலையில் கடைசி முயற்சியாக ஸ்ரீபிரியாவை வைத்து ஆட்டுக்கார அலமேலு படத்தை தயாரிக்க முடிவு செய்தது. அந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகும் நோக்கத்துடன் இருந்தது தேவர் பிலிம்ஸ்.


ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் படம் அமோக வெற்றி அடைந்தது.

தேவர் பிலிம்ஸ் ஸ்ரீப்ரியாவால் தான் மீண்டதாக நினைத்தனர். அதன் பிறகு  தேவர் பிலிம்ஸ் ஸ்ரீபிரியாவை வைத்து எடுக்கும் படங்களில் நடிகர் யாராக இருந்தாலும் முதல் காட்சியை ஸ்ரீபிரியாவை வைத்து தான் தொடங்குவார்கள்.

The post நஷ்டத்தில் இருந்த தேவர் பிலிம்ஸ் ஸ்ரீபிரியாவால் மீண்டது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிவகுமார் இயக்கிய ஒரே படக்காட்சி! https://touringtalkies.co/director-sivakumar-action/ Tue, 11 Oct 2022 12:16:43 +0000 https://touringtalkies.co/?p=25225 நடிகர் சிவகுமார், ஒரு படத்தை  இயக்கி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா.   1960 – 80களில் முக்கிய கதாநாயகனாக இருந்தவர். அப்போது, அவர் நடித்த ஒரு படப்பிடிப்பில், காலையில் சூரியன் எழும் காட்சியை படமாக்க வேண்டும்.  இதை முதல் நாளே சொல்லி விட்டார் இயக்குநர். ஆகவே அதிகாலையிலேயே சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் தளத்துக்கு வந்துவிட்டனர். இயக்குனரை மட்டும் ஆளைக்காணவில்லை. இரவில் மது அருந்திய அவர், காலையில் தூக்கத்தில் இருந்தார். இதனால் டென்சன் ஆன சிவகுமார், உதவி இயக்குநர்கள் […]

The post நடிகர் சிவகுமார் இயக்கிய ஒரே படக்காட்சி! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிவகுமார், ஒரு படத்தை  இயக்கி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா.   1960 – 80களில் முக்கிய கதாநாயகனாக இருந்தவர்.

அப்போது, அவர் நடித்த ஒரு படப்பிடிப்பில், காலையில் சூரியன் எழும் காட்சியை படமாக்க வேண்டும்.  இதை முதல் நாளே சொல்லி விட்டார் இயக்குநர். ஆகவே அதிகாலையிலேயே சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் தளத்துக்கு வந்துவிட்டனர்.

இயக்குனரை மட்டும் ஆளைக்காணவில்லை. இரவில் மது அருந்திய அவர், காலையில் தூக்கத்தில் இருந்தார். இதனால் டென்சன் ஆன சிவகுமார், உதவி இயக்குநர்கள் உதவியுடன் தானே அந்த காட்சியை இயக்கினார்.

டென்சனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சூழலை எதிர்கொள்வதில் சிவகுமாருக்கு நிகர் சிவகுமார்தான். அவரது இளமைக்குக் காரணம் இதுதான் போலும்!

The post நடிகர் சிவகுமார் இயக்கிய ஒரே படக்காட்சி! appeared first on Touring Talkies.

]]>
“நடிக்கமாட்டேன்!” என்று சிவகுமார் முடிவெடுக்க இவர்தான் காரணம்! https://touringtalkies.co/i-wont-act-this-is-the-reason-why-sivakumar-decided-that/ Mon, 10 Oct 2022 05:17:51 +0000 https://touringtalkies.co/?p=25077 ஓவியக் கலை படித்து முடித்த சிவகுமாருக்கு, நடிப்பில்தான் ஆர்வம். ஆகவேதான் சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்தார். இங்கு நடிகர் திலகம் சிவாஜிக்கு வேண்டிய  ஒருவரின் உதவியால்  சிவாஜி நடித்த படத்தின் படப்பிடிப்பை பார்த்தார். அதுதான் முதன் முதல் பார்த்த படப்பிடிப்பு. பிறகு சிவாஜிக்கு வேண்டியவரையும் சிவகுமாரையும் தனது வீட்டுக்கு அழைத்தார் சிவாஜி. அங்கு மினி தியேட்டர் இருந்தது. அதில்தான் நடித்த,    அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி. அதில் மாமன்னம் அசோகனாக நடிப்பில் மிரட்டியிருப்பார். […]

The post “நடிக்கமாட்டேன்!” என்று சிவகுமார் முடிவெடுக்க இவர்தான் காரணம்! appeared first on Touring Talkies.

]]>
ஓவியக் கலை படித்து முடித்த சிவகுமாருக்கு, நடிப்பில்தான் ஆர்வம். ஆகவேதான் சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்தார். இங்கு நடிகர் திலகம் சிவாஜிக்கு வேண்டிய  ஒருவரின் உதவியால்  சிவாஜி நடித்த படத்தின் படப்பிடிப்பை பார்த்தார். அதுதான் முதன் முதல் பார்த்த படப்பிடிப்பு.

பிறகு சிவாஜிக்கு வேண்டியவரையும் சிவகுமாரையும் தனது வீட்டுக்கு அழைத்தார் சிவாஜி. அங்கு மினி தியேட்டர் இருந்தது.

அதில்தான் நடித்த,    அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி.

அதில் மாமன்னம் அசோகனாக நடிப்பில் மிரட்டியிருப்பார்.

பிறகு சிவகுமாரிடம், “நீ  நடிக்க போறீயா? இல்லை பொம்மை போட போறீயா” என கேட்க.. மிரண்டு போயிருந்த சிவகுமார், “நடிக்கலை.. ஓவியம் வரையவே போகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

ஓவியக் கலை படித்து முடித்த சிவகுமாருக்கு, நடிப்பில்தான் ஆர்வம். ஆகவேதான் சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்தார். இங்கு நடிகர் திலகம் சிவாஜிக்கு வேண்டிய  ஒருவரின் உதவியால்  சிவாஜி நடித்த படத்தின் படப்பிடிப்பை பார்த்தார். அதுதான் முதன் முதல் பார்த்த படப்பிடிப்பு.

பிறகு சிவாஜிக்கு வேண்டியவரையும் சிவகுமாரையும் தனது வீட்டுக்கு அழைத்தார் சிவாஜி. அங்கு மினி தியேட்டர் இருந்தது.

அதில்தான் நடித்த,    அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி.

அதில் மாமன்னம் அசோகனாக நடிப்பில் மிரட்டியிருப்பார்.

பிறகு சிவகுமாரிடம், “நீ  நடிக்க போறீயா? இல்லை பொம்மை போட போறீயா” என கேட்க.. மிரண்டு போயிருந்த சிவகுமார், “நடிக்கலை.. ஓவியம் வரையவே போகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

மீண்டும் அவருக்குள் நடிப்பு ஆசை கிளறவே திரைப்படங்களில் நடித்தார். பிறகு சிவாஜி கணேசனுடனேயே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post “நடிக்கமாட்டேன்!” என்று சிவகுமார் முடிவெடுக்க இவர்தான் காரணம்! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் https://touringtalkies.co/cinema-history-81-rajinikanths-first-punch-dialogue/ Wed, 28 Sep 2022 05:51:17 +0000 https://touringtalkies.co/?p=24704 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர். ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு […]

The post சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர்.

ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு அருணாசலத்தை சந்திப்பதை  வழக்கமாக்கிக் கொண்டார் ரஜினி. அவரோடு பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே ரஜினிகாந்த், இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய உயரத்தைத் தொடப் போகும் நடிகர் என்று பஞ்சு அருணாசலத்துக்குப் புரிந்துவிட்டது.

தொடர்ந்து தனது படங்களில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை அந்த முதல் சந்திப்பின்போதே  பஞ்சுஅருணாசலம் எடுத்துவிட்டார்.

கவிக் குயில்’ படத்தைத் தொடர்ந்து விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ பாஸ்கருடன் இணைந்து ‘விஜய மீனா’ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் அந்த நிறுவனத்தின் சார்பில் காயத்ரி’ என்ற படத்தை தயாரித்தார்.

‘காயத்ரி’ சுஜாதா எழுதிய கதை. ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் வெளி வந்திருந்தது. அந்தக் கதையைப் படித்த பஞ்சு அருணாசலத்துக்கு அதைப் படமாக எடுத்தால் நிச்சயம் சினிமாவுக்கு புதிதாக இருக்கும் என்று தோன்றியதால் உடனடியாக எழுத்தாளர் சுஜாதாவுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

“சாவி சார் கேட்டார் என்பதற்காக நான் அவசரத்தில் எழுதிக் கொடுத்த கதை அது. “தினமணி கதிரில்” அந்தக் கதை வந்தபோதே ‘நீங்கள் இப்படி எழுதலாமா?’ என்று எனக்கு நிறையக் கண்டனக் கடிதங்கள் வந்தன. பத்திரிகையில் வெளியானதற்கே அவ்வளவு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட அந்தக் கதையை நீங்கள் எப்படிப் படமாக எடுப்பீர்கள்?’ என்று சுஜாதா கேட்டபோது, “அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கதையை மட்டும் கொடுங்கள்..” என்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தக் காலக்கட்டத்தில் பஞ்சு அருணாசலத்துடன் தொடர்ந்து பணியாற்றியது இரண்டு இயக்குநர்கள்தான். ஒருவர் எஸ்.பி.முத்துராமன், இன்னொருவர் தேவராஜ் மோகன்.

எஸ்.பி.முத்துராமன் அப்போது பஞ்சு அருணாசலம் எழுதிக் கொண்டிருந்த வேறு இரண்டு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தேவராஜ் மோகன் தனது சொந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

ஆகவே இந்த ‘காயத்ரி’ படத்தை இயக்கும் வாய்ப்பினைப் பட்டு என்கிற பட்டாபிராமனுக்கு அளித்தார் பஞ்சு அருணாசலம். சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ படம்  முதல் கிருஷ்ணன் பஞ்சுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் பட்டு.

ஜெய்சங்கர் கதாநாயகனாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும்  நடிக்க 1977-ம் ஆண்டு வெளிவந்த காயத்ரி’ வெற்றிப் படமாகவும் அமைந்தது.

சுஜாதா எழுதியிருந்த அந்தக் கதையில் தான் செய்திருந்த மாறுதல்களை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை சுஜாதாவிற்குக் காட்டி அவரைஅசத்துவதற்காக ‘காயத்ரி’ படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு சுஜாதாவை அழைத்துச் சென்றார் பஞ்சு. ஆனால் அன்று தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து சுஜாதா அசந்ததைவிட அதிகமாக அசந்து போனவர் பஞ்சு அருணாசலம்தான்.

‘காயத்ரி’ படத்தின் வில்லனான ரஜினியை ஹீரோ ஜெய்சங்கர் அடித்தபோது ரசிகர்கள் ஆவேசமாக ஜெய்சங்கரைத் திட்டினார்கள். அதே நேரத்தில் ஹீரோ ஜெய்சங்கரை வில்லன் ரஜினி அடித்தபோது, தியேட்டரில் விசில் பறந்தது.

இனி ரஜினிகாந்த் வில்லனல்ல என்பதையும், தொடர்ந்து அவரை வில்லனாக நடிக்க வைத்துப் படம் எடுத்தால் அது மாதிரியான படங்களை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையும் பஞ்சு அருணாசலத்திற்கு இந்த ‘காயத்ரி’ படம் தெளிவாக உணர்த்தியது.

‘காயத்ரி’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் பெற்ற அந்த அனுபவம்தான் ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் ஒரு முக்கியமான மாறுதலை அவர் செய்யக் காரணமாக அமைந்தது.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் தயாரிப்பாளரான  எம்.ஏ.எம்.மணியும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஏவி.எம்.ஸ்டுடியோவில் மணி புரொடக்‌ஷன் மேனேஜராகப் பணியாற்றியபோது எஸ்.பி.முத்துராமன், அங்கே எடிட்டிங் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

தன்னுடைய நெருங்கிய நண்பரான எஸ்.பி.முத்துராமன் மிகப் பெரிய இயக்குராக உயர்ந்ததும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார் மணி.

அப்போது மகரிஷி எழுதிய ‘பத்ரகாளி’ கதை திருலோகசந்தர் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. ஆகவே அவர் எழுதி ‘குமுதம்’ இதழில் வெளியான ‘புவனா ஒரு கேள்விக் குறி’ கதையின் உரிமையை வாங்கிய மணி, அந்தக் கதையின் மூன்று முக்கியமான பாத்திரங்களுக்கு சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ரா ஆகியோரின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுடன் பஞ்சு அருணாசலத்தை சந்திக்க வந்தார்.

மகரிஷி எழுதிய நாவலை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்ட பஞ்சு அருணாசலம் உடனே அதைப் படித்து முடித்தார். அந்த நாவல் அவருக்கும் பிடித்திருந்தது.

அந்தக் கதைக்கான திரைக்கதையை எழுதி முடித்தபோது வாழ்க்கையைப் பறி கொடுத்த பெண்ணை ஏற்றுக் கொள்ளும் கதாநாயகன் பாத்திரத்தில் சிவகுமாரும், கதாநாயகியைக் கெடுத்துவிட்டு அவளைவிட்டு விலகும் பாத்திரத்தில் ரஜினியும் நடித்தால் அந்தப் படம் வழக்கமான ஒரு படமாக ஆகிவிடக் கூடிய அபாயம் இருப்பதாக பஞ்சு அருணாசலத்துக்குத் தோன்றியது.

தன்னுடைய கருத்தை தயாரிப்பாளரான மணியிடமும், இயக்குநரான எஸ்.பி.முத்துராமனிடமும் சொன்னார் அவர். அவரது அந்தப் பயம் நியாயமானது என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள் என்றாலும்  அந்த நல்லவன் வேடம்தான் சிவகுமாருக்கு என்று ஒப்பந்தம் செய்யும்போதே, சிவகுமாரிடம் சொல்லிவிட்டதால் மீண்டும் அவரிடம் போய் எப்படி மாற்றி சொல்வது என்று அவர்கள் இருவரும் சங்கடப்பட்டார்கள்.

“நெகடிவ்வான பாத்திரத்தை ஏற்று நடித்தால் அவருக்கும் அது வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதே நேரத்தில் படம் வெற்றி பெறவும் அது உதவியாக இருக்கும் என்பதை சிவகுமாருக்கு சொல்வோம். அதற்குப் பிறகும் ‘எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை. நான் அந்த நல்லவன் பாத்திரத்திலேயே நடிக்கிறேன்’ என்று அவர் சொன்னால் அந்தப் பாத்திரத்திலேயே நடிக்கட்டும்” என்றார் பஞ்சு.

சிவகுமாரை சந்தித்து புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் அவருடைய பாத்திரத்தை   மாற்றியிருப்பது பற்றி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் சொன்னபோது “என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க?” என்று முதலில் ஆதங்கப்பட்டாலும், பாத்திரங்களை மாற்றியதற்கான காரணங்களை பஞ்சு அருணாசலம் விளக்கிச் சொன்ன பிறகு பெருந்தன்மையோடு சிவகுமார் ஒப்புக் கொண்டார்.

அப்போது ரஜினிகாந்த் பல படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகராக இருந்த போதிலும் பெரும்பாலான படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். ஆகவே இந்த ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் தான் ஏற்கவிருந்த பாத்திரம் மாற்றப்பட்டது பற்றி அறிந்ததும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார் அவர்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் பஞ்சு அருணாசலம் கொண்டு வந்த முதல் மாற்றம் அது. அந்த மாற்றத்தைக் கொண்டு வந்த பஞ்சு அருணாசலம்தான் ரஜினியின் முதல் ‘பஞ்ச்’ டயலாக்கையும்  எழுதியவர்.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் கதைப்படி சிவகுமார் தவறு செய்துவிட்டு வர, அதனைத் தெரிந்து கொள்ளும் ரஜினி அவரை கண்டிப்பார். அதற்கு சிவகுமார் “பத்தோடு பதினொண்ணு விட்றா” என்று அலட்சியமாக பதில் சொல்ல   ‘‘கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்த கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்”என்று அழுத்தம் திருத்தமாக ரஜினிகாந்த் சொல்வார். ரஜினிகாந்த் திரையில் பேசிய முதல்  ‘பஞ்ச்’ டயலாக் இதுதான்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம் appeared first on Touring Talkies.

]]>