Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
review – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 00:37:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png review – Touring Talkies https://touringtalkies.co 32 32 லோக்கல் சரக்கு விமர்சனம் https://touringtalkies.co/local-sarakku-review/ Sun, 28 Jan 2024 00:25:03 +0000 https://touringtalkies.co/?p=39499 குடும்பத்தலைவர் பொறுப்பில்லாமல் குடிகாரராக இருந்தால், அந்த குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் கூறி உள்ளனர். சென்னையில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் தினேஷ். எந்தவித வேலைக்கும் போகாமல் தனது தங்கை சம்பாதிக்கும் பணத்தில் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.மேலும் அவருக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா துணை நடிகையாக இருக்கும் கதாநாயகி உபாசனா தினேஷின் எதிர் வீட்டில் குடி வருகிறார். அவரிடமும் அவ்வப்போது 200 […]

The post லோக்கல் சரக்கு விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
குடும்பத்தலைவர் பொறுப்பில்லாமல் குடிகாரராக இருந்தால், அந்த குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் கூறி உள்ளனர்.

சென்னையில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் தினேஷ். எந்தவித வேலைக்கும் போகாமல் தனது தங்கை சம்பாதிக்கும் பணத்தில் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.மேலும் அவருக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா துணை நடிகையாக இருக்கும் கதாநாயகி உபாசனா தினேஷின் எதிர் வீட்டில் குடி வருகிறார். அவரிடமும் அவ்வப்போது 200 ரூபாய் வாங்கி குடிக்கிறார். இவை அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது தங்கை வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதே லோக்கல் சரக்கு படத்தின் கதை.

நடன கலைஞர் தினேஷ் ஒரு குடிகாரராக  வருகிறார். இமேஜ் குறித்து கவலைப்படாமல் நடித்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.  தவிர நிஜ குடிகாரரை கண் முன் நிறுத்துகிறார்.

தினசரி ஒவ்வொருவரிடம் வித்தியாச வித்தியாசமாக காரணங்களைக் கூறி, கடன் வாங்கி அவரது நண்பர் யோகி பாபு உடன் குடிக்கும் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.

அவரது நண்பராக  யோகி பாபு வருகிறார். இருவரது காமெடி  காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளன.

கதாநாயகி உபாசனா.  நடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்துகிறார். இவர்களை தவிர வினோதினி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ் ஆகியோர்  படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

இடைவேளையில்  வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் படமாக பார்க்கும் போது அவை பெரிதாக தெரியவில்லை. படத்தின் இறுதியில் ஒரு நல்ல கருத்தை சொல்ல முயற்சித்துள்ளனர்.

குடிகாரனை யாரும் திருத்த முடியாது அவனே நினைத்தால் தான் திருந்த முடியும் போன்ற வசனங்களும் சிறப்பு.

இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசை, கே.எஸ்.பழநியின் ஒளிப்பதிவு, ஜே.எப்.கேஸ்ட்ரோவின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு பலம்.

ஆண்கள் குடிக்க… அதனால் பெண்கள் படும் பாட்டை சிறப்பாக சொல்லி இருக்கிறது படம். ஆகவே அனைரும் பார்க்க வேண்டிய படம்.

 

The post லோக்கல் சரக்கு விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட விமர்சனம்: ’ஜெய் விஜயம்’ https://touringtalkies.co/jai-vijayam-review/ Sun, 28 Jan 2024 00:13:26 +0000 https://touringtalkies.co/?p=39487 நாயகன்,  ’ஹலுசினேஷன்’ என்கிற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதாவது, நடக்காத சம்பவங்கள் எல்லாம், நிஜமாக நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார். அதை நினைத்து பதறுவார். ஆகவே அவரது மனைவி, தங்கை மற்றும் அப்பா ஆகிய குடும்ப  உறுப்பினர்கள், தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்வதாக நாயகனை நம்ப வைத்துக்கொண்டு உள்ளனர். நாயகனை வெளியில் எங்கும் அனுப்ப மாட்டார்கள். அப்படி பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள். நாயகனுக்கு ஏன் அப்படி ஆனது… இறுதியில் குணம் ஆனாரா […]

The post திரைப்பட விமர்சனம்: ’ஜெய் விஜயம்’ appeared first on Touring Talkies.

]]>
நாயகன்,  ’ஹலுசினேஷன்’ என்கிற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதாவது, நடக்காத சம்பவங்கள் எல்லாம், நிஜமாக நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார். அதை நினைத்து பதறுவார்.

ஆகவே அவரது மனைவி, தங்கை மற்றும் அப்பா ஆகிய குடும்ப  உறுப்பினர்கள், தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்வதாக நாயகனை நம்ப வைத்துக்கொண்டு உள்ளனர். நாயகனை வெளியில் எங்கும் அனுப்ப மாட்டார்கள். அப்படி பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள்.

நாயகனுக்கு ஏன் அப்படி ஆனது… இறுதியில் குணம் ஆனாரா என்பதே கதை.

நாயகனாக ஜெய்.  தானே கற்பனை செய்துகொண்டு குழப்பத்துடன் வாழும் கதாபாத்திரம். இதை உணர்ந்து நடித்து உள்ளார்.

நிஜத்தில் நடக்கும் சம்பவங்களைக்கூட, குடும்பத்தினர், கற்பனை என்று சொல்லி அவரை நம்ப வைப்பதும் நடக்கிறது. அப்போதெல்லாம் அவரது தடுமாற்றத்தை  அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது நிலையை உணர்ந்து, அவர் அதிர்ச்சியாகும்போதும் சிறப்பாக நடித்து உள்ளார்.

ஜெய் மனைவியாக வரும் நாயகி அக்‌ஷயா கந்தமுதன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கணவரிடன் காண்பிக்கும் அன்பு, அவரிடம் பொய் சொல்ல வேண்டிய சூழலில் வெளிப்படுத்தும் தர்மசங்கடம் என உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுகிறார்.

ஜெய்யின் தங்கை,  அப்பா என புதுமுகங்களாக இருந்தாலும் தேர்ந்த நடிப்பு.

பால் பாண்டியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

சதீஷ்குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன.

ஜெய்க்கு உள்ள வித்தியாசமான நோய்… தவிர அவரைச் சுற்றி நடக்கும் நாடகம் என ஆரம்பம் முதலே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஜெயசதீஷ்வரன் நாகேஸ்வரன்.

இடைவேளைக்குப் பிறகு  மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. ஆனாலும், சுவாரஸ்யம் குறையவில்லை.

குறைவான பட்ஜெட்டில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை அளித்திருக்கும் இயக்குநர், தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர்களே.

 

The post திரைப்பட விமர்சனம்: ’ஜெய் விஜயம்’ appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: ப்ளூ ஸ்டார் https://touringtalkies.co/review-blue-star/ Fri, 26 Jan 2024 07:56:23 +0000 https://touringtalkies.co/?p=39425 அரக்கோணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்  ராஜேஷ். அதே ஊரின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்.  இருவருமே அவரவர் பகுதியின் கிரிக்கெட் டீமுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். சாதி மோதல் காரணமாக, ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை. இந்த நிலையில், ஊர்க்கோவில் திருவிழாவில் இரு அணியினரும் மோத தயாராகிறார்கள். போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ராஜேஷ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் […]

The post விமர்சனம்: ப்ளூ ஸ்டார் appeared first on Touring Talkies.

]]>
அரக்கோணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்  ராஜேஷ். அதே ஊரின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்.  இருவருமே அவரவர் பகுதியின் கிரிக்கெட் டீமுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள்.

சாதி மோதல் காரணமாக, ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை.

இந்த நிலையில், ஊர்க்கோவில் திருவிழாவில் இரு அணியினரும் மோத தயாராகிறார்கள். போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ராஜேஷ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் ரஞ்சித்தின் ப்ளூஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றனர்.

மகிழ்ச்சியில் இருக்கும் ராஜேஷ், தான் அழைத்து வந்த வீரர்களுக்கு கூறியபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார். அங்கு, அவர் கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறார். அப்போது அவருக்காக காலனி பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலரும், ரஞ்சித்தும் களம் இறங்குகிறார்கள்.

இதையடுத்து இருவரும் இணைய… இருவரது அணிகளும் இணைகின்றன.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

 

 

 

போர் தொழில், சபாநாயகன் என முத்திரை பதிக்கும் வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து உள்ளார் அசோக் செல்வன். அந்த வரிசையில் ப்ளூ ஸ்டார் படமும் சேர்ந்திருக்கிறது.

அரக்கோணம் பகுதி இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். அதே போல ஒடுக்கப்பட்ட இனத்தின் ஆக்ரோச இளைஞனாகவே மாறி இருக்கிறார். அவரது உடல் மொழி, பேச்சு அத்தனையும் சிறப்பு.

ராவண கோட்டம் படத்துக்குப் பிறகு இன்னொருமொரு அதிரடி கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார் சாந்தனு.  ஆதிக்க சாதியின இளைஞராக வருகிறார். அறியாமலேயே தனக்குள் ஊன்றி விதைக்கப்பட்ட ஆதிக்க உணர்வை இயல்பாக வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில், காலனியைச் சேர்ந்த இளைஞன் தனக்காக வந்து நிற்க… அவனும் மனதார இணைகிறார். சிறப்பாக நடித்து இருக்கிறார் சாந்தனு.

 

நாயகி, கீர்த்தி பாண்டியன்  90களின் டீன் ஏஜ் பெண்ணை கண்முன் நிறுத்துகிறார்.  காதலனுடன் செல்லச் சண்டை இடுவது, கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துவது என சிறப்பாக நடித்து உள்ளார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் ”புல்லட் பாபு” கதாப்பாத்திரம் கைத்தட்டல்களை அள்ளுகின்றது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள குணச்சித்ர கதாப்பாத்திரத்தில் பகவதி பெருமாள் ஸ்கோர் செய்கின்றார்.

அசோக் செல்வன் அம்மாவாக நடித்துள்ள லிசி ஆண்டனியின் காட்சிகளுக்கும் தம்பியாக நடித்துள்ள பிரித்விராஜன் இடையே நடக்கும் சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்கும் ரசிக்கவைக்கின்றன.

அதே போல ஒவ்வொருவரையுமே தேவையான அளவு நடிக்க வைத்து சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

கோவிந்த் வசந்தாவின் ரயிலின் ஒலிகள் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்துக்கு பலம்.

 

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இயல்பான காட்சிகளும் வசனங்களும் ரசிக்கவைக்கின்றன.

ஊரும், சேரியும் மோதிக்கொள்ள வேண்டியதே இல்லை.. இணைந்து செயல்பட வேண்டும்  என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனரான ஜெயக்குமார்.

 

 

 

The post விமர்சனம்: ப்ளூ ஸ்டார் appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: சிங்கப்பூர் சலூன் https://touringtalkies.co/review-singapore-saloon/ Fri, 26 Jan 2024 01:49:03 +0000 https://touringtalkies.co/?p=39420 பொறியியல் படித்த இளைஞன் கதிர். இவரது வீட்டுக்குப் பக்கத்தில் முடி திருத்தும் நிலையம் நடத்துகிறார் சாச்சா.  இவரது  ஸ்டைலான முடி திருத்தும் பணியைப் பார்த்து லயித்து, அவரைப் போலவே ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் இளைஞன் கதிர். இதில் பல தடைகளைச் சந்திக்கிறான். இவற்றை மீறி தனது இலக்கை அடைந்தானா என்பதுதான் கதை. இளைஞன் கதிராகா, ஆர்.ஜே.பாலாஜி தோன்றுகிறார். வழக்கம்போல, டைமிங் காமெடியில் அசத்துகிறார். கதிர் என்ற கதாபாத்திரமாகப் பொருந்துகிறார். நாயகிகி  மீனாக்ஷி சௌத்ரிக்கு […]

The post விமர்சனம்: சிங்கப்பூர் சலூன் appeared first on Touring Talkies.

]]>
பொறியியல் படித்த இளைஞன் கதிர். இவரது வீட்டுக்குப் பக்கத்தில் முடி திருத்தும் நிலையம் நடத்துகிறார் சாச்சா.  இவரது  ஸ்டைலான முடி திருத்தும் பணியைப் பார்த்து லயித்து, அவரைப் போலவே ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் இளைஞன் கதிர்.

இதில் பல தடைகளைச் சந்திக்கிறான். இவற்றை மீறி தனது இலக்கை அடைந்தானா என்பதுதான் கதை.

இளைஞன் கதிராகா, ஆர்.ஜே.பாலாஜி தோன்றுகிறார். வழக்கம்போல, டைமிங் காமெடியில் அசத்துகிறார். கதிர் என்ற கதாபாத்திரமாகப் பொருந்துகிறார்.

நாயகிகி  மீனாக்ஷி சௌத்ரிக்கு அழுவதைத் தவிரப் பெரிதாக வேலை இல்லை. மற்றபடி சொல்வதற்கு ஏதுமில்லை.

கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், லால் என  அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்கள்.

சத்யராஜ் அசத்துகிறார். கஞ்சாம்பட்டி மாமனாராக வரும் அவரது அலப்பறைகள் ரசிக்கவைக்கின்றன.  அதிலும் இடைவெளிக்கு முந்தைய பத்து நிமிட அட்ராசிட்டி சிறப்பு.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஜாவேத் ரியாஸின் பின்னணி இசையும் ஓகே.

செல்வகுமாரின் எடிட்டிங் கச்சிதம்.  சலூன் கடையை சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார்  கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்.

நகைச்சுவையாக செல்லும்வரை படம் ஓகேதான்.  ஆனால், திடீரென, சீரிஸஸ் மோடுக்கு மாறும்போது திரைக்கதை தள்ளாடுகிறது. வெள்ள பாதிப்பு, வாழ்விடத்தை இழக்கும் மக்கள், பறவைகள் குறித்த விழிப்புணர்வு என ஏகத்துக்கு அட்வைஸ் செய்து போரடிக்கிறார்கள்.  இவற்றில்,  ஏதாவது  ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம்.

குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு,  பல காட்சிகள் அந்நியப்பட்டு நிற்கின்றன.

ஆனாலும் பல நல்ல விசயங்களை, சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என முயற்சித்த இயக்குநர் கோகுலுக்கு பாராட்டுகள்.

 

The post விமர்சனம்: சிங்கப்பூர் சலூன் appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட விமர்சனம்: மதிமாறன் https://touringtalkies.co/mathimaran-review/ Sun, 31 Dec 2023 01:12:06 +0000 https://touringtalkies.co/?p=39332 ஜிஎஸ் சினிமா தயாரிப்பில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கி உள்ள படம் மதிமாறன். வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளும் நரேன் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்து உள்ளார். படத்தின் நாயகன்  வெங்கட் செங்குட்டுவன் திருநெல்வேலி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்.  இவர், உடல் வளர்ச்சி இல்லாத, உயரம் குறைவான மனிதர். இதனால் பலரது கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். கல்லூரியில் படித்து வரும் இவரது அக்கா இவானா கல்லூரி பேராசிரியருடன் […]

The post திரைப்பட விமர்சனம்: மதிமாறன் appeared first on Touring Talkies.

]]>
ஜிஎஸ் சினிமா தயாரிப்பில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கி உள்ள படம் மதிமாறன்.

வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளும் நரேன் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்து உள்ளார்.

படத்தின் நாயகன்  வெங்கட் செங்குட்டுவன் திருநெல்வேலி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்.  இவர், உடல் வளர்ச்சி இல்லாத, உயரம் குறைவான மனிதர். இதனால் பலரது கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். கல்லூரியில் படித்து வரும் இவரது அக்கா இவானா கல்லூரி பேராசிரியருடன் ஓடி விடுகிறார், இதனால் அவரது அப்பா எம்.எஸ்.பாஸ்கர்  மற்றும் அம்மா இருவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதன்பிறகு தனது அக்காவை தேடி சென்னைக்கு செல்கிறார் வெங்கட். அங்கு தொடர்ச்சியாக பல மர்ம மரணங்கள் நிகழ்கிறது அதை எப்படி வெங்கட் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.

நாயகன் வெங்கட் செங்குட்டுவன் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். படத்தை தனது தோள்களில் சுமந்து செல்கிறார்.

கதாநாயகியான  இவானாவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் போஸ்ட் மாஸ்டராக வரும் எம்எஸ் பாஸ்கர், போலீசாக வரும் ஆடுகளம் நரேன் என அனைவரும் நல்ல பெர்பார்மன்சை வழங்கி உள்ளனர்.

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

உயரம் குறைவாக  இருப்பவர்களை கிண்டல் செய்யும் குணம் பலருக்கு உண்டு.  சம்பந்தப்பட்ட நபரின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உணர்வதில்லை.

இந்த பிரச்சினையை  அடிப்படையாக வைத்து, படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர்.  அதற்காக பாராட்டலாம்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார் இயக்குநர்.

 

 

The post திரைப்பட விமர்சனம்: மதிமாறன் appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்:  நந்திவர்மன்  https://touringtalkies.co/nandhi-varman-review/ Sat, 30 Dec 2023 01:42:25 +0000 https://touringtalkies.co/?p=39296 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்… செஞ்சி அருகில் உள்ள அனுமந்தபுரம் என்ற கிராமம்.. பல்லவ மன்னன் பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆளுகைக்கு உட்பட்ட இந்த கிராமம்  செல்வ செழிப்புடன் இருக்கிறது. தவிர இங்குள்ள அனுமந்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தமானது. இந்த கோயிலுக்குள் தங்கப்புதையல் இருக்கிறது. இதை கொள்ளையடிக்க, கோரா என்ற கொள்ளையன் வருகிறான். அவனை தோற்கடித்த மன்னன் நந்திவர்மன், தானும் இறந்துவிடுகிறான். தற்போதைய காலகட்டத்தில் போஸ் வெங்கட் தலைமையில் குழுவினர் இந்த கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த ஊருக்கு வருகின்றனர். […]

The post விமர்சனம்:  நந்திவர்மன்  appeared first on Touring Talkies.

]]>
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்… செஞ்சி அருகில் உள்ள அனுமந்தபுரம் என்ற கிராமம்.. பல்லவ மன்னன் பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆளுகைக்கு உட்பட்ட இந்த கிராமம்  செல்வ செழிப்புடன் இருக்கிறது. தவிர இங்குள்ள அனுமந்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தமானது.

இந்த கோயிலுக்குள் தங்கப்புதையல் இருக்கிறது. இதை கொள்ளையடிக்க, கோரா என்ற கொள்ளையன் வருகிறான். அவனை தோற்கடித்த மன்னன் நந்திவர்மன், தானும் இறந்துவிடுகிறான்.

தற்போதைய காலகட்டத்தில் போஸ் வெங்கட் தலைமையில் குழுவினர் இந்த கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த ஊருக்கு வருகின்றனர். இதன் பின்பு அந்த ஊரில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

இறுதியில் தங்கப் புதையலை கண்டுபிடித்தார்களா,  ஊரில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு யார் காரணம் என்பதே நந்திவர்மன் படத்தில் கதை.

எஸ்.ஐ.யாக வரும் ஹீரோவாக சுரேஷ் ரவி, சிறப்பாக நடித்து உள்ளார். நிழல்கள் ரவி, போஸ் வெங்கட்  ஆகியோர் வழக்கம் போல் பாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். தவிர நிழல்கள் ரவி, ஊர் தலைவராக வரும் கஜராஜ், குடிகாரராக வரும் முல்லை கோதண்டம் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

பெலிக்ஸ் இசையில் பின்னணி இசை சுவாரசியமாக இருந்தது, பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். செயோன் முத்துவின் ஒளிப்பதிவு மற்றும் சான் லோகேஸின் எடிட்டிங் படத்திற்கு பலம்.

பெருமாள் வரதனின் திரைக்கதை சுவாரஸ்யம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும்  வரலாற்று கதை நம்பும் படியாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற ஆவலை தூண்டுகிறது.

ஆனாலும், தொடரும் காட்சிகள் அத்தனை ஈர்ப்பாக அமையவில்லை.  இதற்கு முக்கிய காரணம் படத்தில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் தான். சண்டை போடுவதில் தொடங்கி கோவிலை காட்டுவது வரை அனைத்து விஎப்எக்ஸ் செய்துள்ளனர் ,இது படத்தை விட்டு நம்மை விலகிப்போக வைக்கிறது. 

ஆனாலும் கிரைம் திரில்லர் படங்களை ரசிப்பவர்கள்   நந்திவர்மன் படத்தை பார்க்கலாம்.

 

 

 

The post விமர்சனம்:  நந்திவர்மன்  appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: சலார் https://touringtalkies.co/salaar-review/ Fri, 29 Dec 2023 05:40:18 +0000 https://touringtalkies.co/?p=39268 கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ்  கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும்  பான் இந்தியா திரைப்படம் சலார். பாகுபலி, கே.ஜி.எஃப் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியால் இவர்கள் இணையும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சலார்  எப்படி இருக்கி? உயிருக்கு உயிரான நண்பன் மீது ஒரு அளவு கடந்த பாசம். தன்னைப் பெற்ற தாய் மீது அதீத பாசம். இப்படி இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தில் யார் பக்கம் சலார் பிரபாஸ் நிற்கிறார் என்பதே சலார் […]

The post விமர்சனம்: சலார் appeared first on Touring Talkies.

]]>
கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ்  கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும்  பான் இந்தியா திரைப்படம் சலார். பாகுபலி, கே.ஜி.எஃப் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியால் இவர்கள் இணையும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

சலார்  எப்படி இருக்கி? உயிருக்கு உயிரான நண்பன் மீது ஒரு அளவு கடந்த பாசம். தன்னைப் பெற்ற தாய் மீது அதீத பாசம். இப்படி இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தில் யார் பக்கம் சலார் பிரபாஸ் நிற்கிறார் என்பதே சலார் பட முதல் பாகத்தின் கதை. இந்தியாவில் தன் அம்மாவின் அஸ்தியை கரைக்க வெளிநாட்டில் இருந்து வருகிறார் நாயகி சுருதிஹாசன்.

மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் இவரை கொல்ல முயற்சி செய்கி றது. முக்கிய தலைவர்களின் ஒத்துழைப்போடு கொலை முயற்சி நடக்கிறது.  அவர்களிடமிருந்து  காப்பாற்றி சுருதிஹாசனை பிரபாஸிடம் ஒப்படைக்கிறார் மைம் கோபி.

அம்மா பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாயகன். தாய் ஈஸ்வரி ராவின் சொல்லுக்கிணங்க  எந்த அடிதடிக்கும் செல்லாமல் சாதுவாக இருக்கிறார் நாயகன் பிரபாஸ்.  சுருதிஹாசனை கொல்ல வரும்போது தாய் சொன்ன பிறகு எதிரிகளை  அடித்து துவம்சம் செய்து காப்பாற்றுகிறார். இதைக் கேள்விப்பட்ட வில்லனாக வரும்  பிரித்விராஜ் கும்பல், பிரபாஸை துவம்சம் செய்ய அவர் வீட்டுக்கு வருகின்றனர்.

மிகப் பெரிய வீரனாக இருக்கும்  பிரபாஸ் ஏன் தன் தாயின் கட்டுப்பாட்டிற்குள் சாதுவாக இருக்கிறார்? இவருக்கும் அவருடைய நண்பர் பிரித்விராஜுக்கும் இருக்கும் உறவு என்ன? என்பதே சலார் படத்தின் மீதி கதை .அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல். அதிரடி ஆக்‌சன், பாசம் என பிரம்மாண்ட படமாக முதல் பாதி இருக்கிறது.

இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன அதில் பிரபாஸுக்கும் பிரித்வி ராஜுக்குமான நட்பு, அதன் பிறகு ஏற்படும் பகை, மோதல், அடிதடி சண்டை பழிவாங்கல் என படம் நீள்கிறது. சண்டைக் காட்சிகளை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த வைக்கிறார் இயக்குனர்.

பிரபாஸின் நடிப்பு  அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மாஸாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெருகிறார்.

பிருத்விராஜ் எதார்த்தமான நடிப்பில் மனதில் நிற்கிறார்.

பாகுபலிக்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு சலார் படம் மூலம் திரும்பி இருக்கிறார் பிரபாஸ். படம் முழுவதும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார் பிரபாஸ். நாயகியாக வரும் சுருதிஹாசன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்துகிறார் ஈஸ்வரி ராவ்.

வில்லனாக வரும்  பிரித்விராஜ் பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ஒரு சில  காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார் மைம் கோபி. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஜெகபதிபாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், கருடா ஆகியோர் படத்திற்கு தகுந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரவி பஸ்ரூர் இசையில் பாடல்கள் அருமை.

அதிரடி ஆக்சன், பாசம், நட்பு என ரசிகர்கள் விரும்பும் கதைக்களத்துடன் வெளியாகி விருந்து வைத்திருக்கிறது சலார்.

 

The post விமர்சனம்: சலார் appeared first on Touring Talkies.

]]>
திரைவிமர்சனம்: வட்டார வழக்கு https://touringtalkies.co/vattara-valakku-review/ Fri, 29 Dec 2023 05:38:44 +0000 https://touringtalkies.co/?p=39265 கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் காதல், கிராமம் பின்னணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வட்டார வழக்கு. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக  பகை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம நாயகன் சேந்தன் இன்னொரு குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்த கதையை  வட்டார மனிதர்களின் எமோஷனலாக தந்துள்ளார் இயக்குநர். படத்தில் […]

The post திரைவிமர்சனம்: வட்டார வழக்கு appeared first on Touring Talkies.

]]>
கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் காதல், கிராமம் பின்னணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வட்டார வழக்கு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக  பகை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம நாயகன் சேந்தன் இன்னொரு குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்த கதையை  வட்டார மனிதர்களின் எமோஷனலாக தந்துள்ளார் இயக்குநர்.

படத்தில் பெரும்பான்மையான நடிகர்கள் கதை நடக்கும் இடத்தில் இருக்கும் மக்களையே நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.  இதுவே இப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இவர்களின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் படம் பார்க்கும் நம்மை ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.    ரவீனா ரவி இதற்கு முன்பு லவ் டுடே, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும்   இந்த படத்தில் மண்ணின் பெண்ணாக, கிராமத்து ஆசிரியராக  தொட்டிச்சி  கதா பாத்திரத்தில் ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படத்தின் நாயகனாக  சந்தோஷ் ஏற்கனவே டுலெட் படத்தில் நடித்து கவனம் பெற்றவர். இப்படத்தில் ஒரு கிராமத்து முரட்டு மனிதனாக, கோபத்தையும் காதலையும் சரிவிதத்தில் கொடுத்துள்ளார்.

இளையராஜாவின்  பின்னணி இசை படத்தின் பலத்தை கூட்டுக்கிறது. படத்தின் கதை 1987 கால கட்டத்தில் நடப்பது போன்று கதை அமைத்திருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் ராஜாவின் இசையில் வெளியான சில பாடல்கள் அவ்வப்பொழுது பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சுரேஷின் ஒளிப்பதிவில் கரிசல் காட்டின் காட்சிகள் கண்முன் நிறுத்தியுள்ளார்.

வட்டார வழக்கு  ஆடம்பரம் இல்லாத  ஒரு கிராமத்து வாழ்க்கையில் நம்மையும்  சேர்த்து பயணிக்க வைக்கிறார் இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன்.

 

The post திரைவிமர்சனம்: வட்டார வழக்கு appeared first on Touring Talkies.

]]>
திரை விமர்சனம்: சபாநாயகன் https://touringtalkies.co/saba-nayagan-review/ Mon, 25 Dec 2023 02:14:58 +0000 https://touringtalkies.co/?p=39179 இரவு நேரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ரகளை செய்ததற்காக காவல்துறையிடம் சிக்குகிறார் ச.பா. அரவிந்த் என்கிற சபா (அசோக் செல்வன்). காவல்துறைவாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களிடம் தன் காதல் கதைகளைச் சொல்கிறார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த சபா, ஈரோட்டில் 11-ம் வகுப்பில்சேர்கிறார். அதே பள்ளியில் படிக்கும் ஈஷா (கார்த்திகா முரளிதரன்) மீது அவருக்கு காதல் . ஆனால் அவளிடம் பேசுவதற்கு முன்பே பள்ளிக் காலம் முடிந்துவிடுகிறது. பிறகு பொறியியல் கல்லூரியில் ரியா(சந்தினி சவுத்ரி), எம்பிஏ படிக்கும்போது […]

The post திரை விமர்சனம்: சபாநாயகன் appeared first on Touring Talkies.

]]>
இரவு நேரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ரகளை செய்ததற்காக காவல்துறையிடம் சிக்குகிறார் ச.பா. அரவிந்த் என்கிற சபா (அசோக் செல்வன்). காவல்துறைவாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களிடம் தன் காதல் கதைகளைச் சொல்கிறார்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த சபா, ஈரோட்டில் 11-ம் வகுப்பில்சேர்கிறார். அதே பள்ளியில் படிக்கும் ஈஷா (கார்த்திகா முரளிதரன்) மீது அவருக்கு காதல் . ஆனால் அவளிடம் பேசுவதற்கு முன்பே பள்ளிக் காலம் முடிந்துவிடுகிறது. பிறகு பொறியியல் கல்லூரியில் ரியா(சந்தினி சவுத்ரி), எம்பிஏ படிக்கும்போது சக மாணவி (மேகா ஆகாஷ்) ஆகியோரைக் காதலிக்கிறார். இடையில் பள்ளிப் பருவக் காதலி ஈஷா, மீண்டும் சபாவின் வாழ்வுக்குள் வந்துபோகிறாள். வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் 3 பெண்களைக் காதலிக்கும் சபா இறுதியில் யாருடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார் என்பதே மீதிக் கதை.

நாயகனுக்கு வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் காதல்களை வைத்து ‘ஆட்டோகிராப்’ தொடங்கி சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஜோ’ வரை பல படங்கள் வந்துவிட்டன. ஆனால் திரைக்கதையை சுவாரஸியமாகவும் கலகலப்பாகவும் அமைத்துவிட்டால் பார்த்த கதை என்றாலும் சலிப்பைத் தராது என்பதற்கான உதாரணம் அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயனின் ‘சபா நாயகன்’. படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை சிரிக்க வைப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் கார்த்திகேயன் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

பள்ளிப் பருவக் காட்சிகளில் நாயகனின் நண்பர்கள் சிலருக்கு காதல் கைகூடிவிடுவதும் நாயகனுக்கு மட்டும் கைகூடாமல் இருப்பதும் இதனால் ஏற்படும் கிண்டல் கேலிகளும் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் கல்லூரிப் பருவத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக 200 ரன்கள் அடித்த சாதனை, நாயகனின் வாழ்வில் முக்கிய திருப்பத்துக்குக் காரணமாக அமைவது, இரண்டாம் பாதியில் நாயகனின் நண்பர் ஒருவரை இதய மருத்துவர் என்று பொய் சொல்வதால் ஏற்படும் ரகளைகள் என அங்காங்கே சுவாரஸியமான ஐடியாக்களைத் தூவியிருப்பதால் திரைக்கதை தொய்வின்றி நகர்கிறது.இடையிடையே நிகழ்காலத்துக்கு வரும் திரைக்கதையில் நாயகனின் கதையைக் கேட்கும் காவலர்கள் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.

அதே நேரம் வசதியான குடும்பத்தில் பிறந்து தனக்கேற்ற காதலியைத் தேடுவதிலும் நண்பர்களுடன்பொழுதுபோக்குவதையுமே வேலையாகக் கொண்டிருக்கும் நாயகனுடன் எத்தனை பேரால் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை. அதோடு பள்ளிப் பருவத்திலேயே நாயகன் நண்பர்களுடன் மது அருந்துவதை இயல்பான விஷயமாகக் காண்பித்திருப்பது கண்டனத்துக்குரியது.

இதற்கு மாறாக இரண்டாம் பாதியில் சில இடங்களில் முதிர்ச்சியான அணுகுமுறை வெளிப்படுகிறது. நாயகனும் அவன் நண்பர்களும் காதல் தோல்வி அடைந்தாலும் பெண்களை வசைபாடாமல் இருப்பது ஆறுதல். கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேர திரைக்கதை இதற்கு அதிகம்தான். இறுதியில் வரும் ட்விஸ்ட் ஆச்சரியம் அளிக்கிறது என்றாலும் அது இல்லாமலேயே கூட படம் நிறைவை அளித்திருக்கும்.

பதின்பருவ விடலைத்தனத்திலிருந்து படிப்படியாக முதிர்ச்சியடையும் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன்அழகாகப் பொருந்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். நாயகியரில் கார்த்திகா முரளிதரன் நன்றாக நடித்து இருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் மேகா ஆகாஷும் ரசிக்க வைக்கிறார்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. பால சுப்ரமணியெம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என மூவர் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் படம் முழுக்க கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

கதையில் புதுமை இல்லை என்றாலும் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கிறான் இந்த ‘சபா நாயகன்’.

 

The post திரை விமர்சனம்: சபாநாயகன் appeared first on Touring Talkies.

]]>
திரைவிமர்சனம்: டங்கி https://touringtalkies.co/shah-rukh-khan-dunki-film-review/ Sat, 23 Dec 2023 01:44:24 +0000 https://touringtalkies.co/?p=39114 ராஜ்குமார்  ஹிரானிபிலிம்ஸ்சார்பில்  ராஜ்குமார்ஹிரானி, கவுரிகான், ஜோதிதேஷ் பாண்டே தயாரிப்பில் டாப்ஸிபன்னு, ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டங்கி. விக்கிகவுஷல், பொம்மன்இரானி, அபிஜத்தோஷி, ஆகியோருடன் இணைந்து எழுதி இருப்பதோடு, படத்தொகுப்பும் செய்து ராஜ்குமார்ஹிரானி  இயக்கியிருக்கிறார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியாவில் பஞ்சாபில் இருந்து லண்டனுக்கு நிறைய தொழிலாளர்கள் போகிறார்கள். அவர்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர்.  அவர்களின் சொந்தங்கள் லண்டன் போவதும் செட்டில் ஆகிறது. பஞ்சாப் கிராம மக்கள் இதைப் பெருமிதமாக எடுத்துக் கொண்டு ‘நாங்கள்லாம் லண்டன் காரங்க..’என்று பெருமிதப்படுகின்றனர். 1962 ஆம் ஆண்டில் […]

The post திரைவிமர்சனம்: டங்கி appeared first on Touring Talkies.

]]>
ராஜ்குமார்  ஹிரானிபிலிம்ஸ்சார்பில்  ராஜ்குமார்ஹிரானி, கவுரிகான், ஜோதிதேஷ் பாண்டே தயாரிப்பில் டாப்ஸிபன்னு, ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டங்கி.

விக்கிகவுஷல், பொம்மன்இரானி, அபிஜத்தோஷி, ஆகியோருடன் இணைந்து எழுதி இருப்பதோடு, படத்தொகுப்பும் செய்து ராஜ்குமார்ஹிரானி  இயக்கியிருக்கிறார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியாவில் பஞ்சாபில் இருந்து லண்டனுக்கு நிறைய தொழிலாளர்கள் போகிறார்கள். அவர்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர்.  அவர்களின் சொந்தங்கள் லண்டன் போவதும் செட்டில் ஆகிறது.

பஞ்சாப் கிராம மக்கள் இதைப் பெருமிதமாக எடுத்துக் கொண்டு ‘நாங்கள்லாம் லண்டன் காரங்க..’என்று பெருமிதப்படுகின்றனர்.

1962 ஆம் ஆண்டில் இந்த சலுகைகளை எல்லாம் இங்கிலாந்து ரத்து செய்கிறது. வசதி இல்லாதவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள்   போக முடியாது என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

ஒரு ராணுவ வீரனைக் காப்பாற்றியதால் தனது அண்ணனை இழந்து தாங்கள் வாழ்ந்த பெரிய வீட்டையும் இழந்து , அந்த வீட்டை மீட்க ஆசைப்படும் மனு ரந்தாவாக  டாப்ஸி நடித்துள்ளார்.  மற்றும் சிலர் லண்டன் போக ஆசைப்பட, பணத்தை இழந்து விடுகின்றனர்.

அதனால் அந்த ஊர் நபர் ஒருவர் தனது காதலியை பார்க்கப் போக முடியாமல் போகிறது. ஆனால் அந்த அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறார். அதை அறிந்து லண்டன் போக முடியாமல் போன  அவரும்  விக்கி கவுஷல் தற்கொலை செய்து கொள்கிறார்.

அண்ணனால் காப்பாற்றப்பட்ட ராணுவ  மேஜராக  ஷாருக் கான். அவர்களை சட்ட விரோதமாக  லண்டன் கொண்டு போக முயற்சிக்கிறார்.

மொத்தக் கதையும் பிளாஷ்பேக் ஆக காட்டுகிறார்கள்  மீதி நடந்தது என்ன என்பதே கதை.

ஆங்காங்கே கொஞ்சம் சட்டை காட்சிகள் இருந்தாலும் இது அந்த மாதிரி படம் இல்லை. உலகம் ஒன்றே என்ற விஷயங்களைப் பேசும் படமாக அமைந்துள்ளது.

காமெடி, டெண்டிமெண்ட்ம், ஆக்‌ஷன் என கதையும் வசனங்களும் அற்புதமாக அமைந்திருக்கிறது.

முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய், குமார் பங்கஜ் ஆகியோரின் ஒளிப்பதிவும் ப்ரீதம் அமன் பந்த் ஆகியோர் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

டாப்ஸி,ஷாருக்கான் இருவரும் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

விக்கி கவுஷல் மரணம், நீதிமன்ற காட்சி, என்று பல அருமையான அழுத்தமான கேரக்டர்கள்.

ராணுவமேஜராகஇருந்தகாரணத்தால்எந்தசூழ்நிலையிலும்நாட்டைவிட்டுக்கொடுக்கவிரும்பாதஷாருக்கானின்கதாபாத்திரம், வீட்டைமீட்க

போராடும் பன்னு இருவருக்கும் இருக்கும் காதல் என்று கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் நேர்த்தியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

படம் நண்பர்கள் மற்றும் அகதிகள் பிரச்சனை பற்றிப் பேசியிருக்கிறார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் கலம் இறங்கியிருக்கும் டங்கி  பார்த்து ரசிக்கலாம்.

 

The post திரைவிமர்சனம்: டங்கி appeared first on Touring Talkies.

]]>