Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
hindi – Touring Talkies https://touringtalkies.co Thu, 21 Sep 2023 06:17:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png hindi – Touring Talkies https://touringtalkies.co 32 32 “இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! https://touringtalkies.co/yes-but-no-difference-between-twins/ Thu, 21 Sep 2023 06:17:34 +0000 https://touringtalkies.co/?p=36457 ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா நடித்து 1962ல் வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.  இதை இந்தியில் தில் ஏக் மந்திர் என்ற பெயரில் உருவாக்கினார் ஸ்ரீதர். ராஜ்கபூர் – மீனா குமாரி ஆகியோரை ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். அப்போது மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களாக விளங்கிய ஷங்கர் – ஜெய்கிஷன் ஆகியோரை புக் செய்தார். படப்படிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், இசை இரட்டையர்கள் பிரிந்து தனித்தனியாக இசை அமைப்பது என்கிற […]

The post “இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா நடித்து 1962ல் வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.  இதை இந்தியில் தில் ஏக் மந்திர் என்ற பெயரில் உருவாக்கினார் ஸ்ரீதர். ராஜ்கபூர் – மீனா குமாரி ஆகியோரை ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். அப்போது மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களாக விளங்கிய ஷங்கர் – ஜெய்கிஷன் ஆகியோரை புக் செய்தார்.

படப்படிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், இசை இரட்டையர்கள் பிரிந்து தனித்தனியாக இசை அமைப்பது என்கிற முடிவை எடுத்தார்கள்.

இது ஸ்ரீதருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், அந்த இரட்டையர்களுக்கு என தனி மார்க்கெட் உண்டு. தனியாக பிரிந்தால், படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும்.

அவர் எவ்வளவோ பேசிப்பார்த்தும் பிரியும் முடிவில் உறுதியாக இருந்தார்கள் இரட்டையர்கள். படத்தின் ஹீரோ ராஜ்குமாரும் பேசிப்பார்த்தார். பலனில்லை.

அப்போது ராஜ்குமார் ஒரு யோசனை தெரிவித்தார். அதாவது, ‘இருக்கு ஆனா இல்லை..’ என்பது மாதிரித்தான் அது.

இரட்டையர்கள் கூட்டணி உண்டு.. ஆனா இல்லை…

அதெப்படி என்கிறீர்களா.. அறிந்துகொள்ள  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post “இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! appeared first on Touring Talkies.

]]>
ஒதுக்கப்பட்ட ஹேமமாலினி, லேடி சூப்பர் ஸ்டார் ஆன அதிசயம்! https://touringtalkies.co/the-miracle-of-a-marginalized-heroine-becoming-a-lady-superstar/ Sat, 19 Aug 2023 04:09:43 +0000 https://touringtalkies.co/?p=35434 ஒரு காலத்தில் ஹிந்தித் திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஹேமமாலினி. இவரது சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம்.  பிறகு இவரது குடும்பம் சென்னையில் வசிக்க ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர் ஸ்ரீதர் தனது  வெண்ணிற ஆடை படத்தில் நடிக்க ஹேமமாலினியை புக் செய்தார்.  ஒரு பாடல் காட்சியும் எடக்கப்பட்டது. ஆனால் இவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார் ஸ்ரீதர். இதனால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார் […]

The post ஒதுக்கப்பட்ட ஹேமமாலினி, லேடி சூப்பர் ஸ்டார் ஆன அதிசயம்! appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலத்தில் ஹிந்தித் திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஹேமமாலினி.

இவரது சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம்.  பிறகு இவரது குடும்பம் சென்னையில் வசிக்க ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர் ஸ்ரீதர் தனது  வெண்ணிற ஆடை படத்தில் நடிக்க ஹேமமாலினியை புக் செய்தார்.  ஒரு பாடல் காட்சியும் எடக்கப்பட்டது. ஆனால் இவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார் ஸ்ரீதர்.

இதனால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார் ஹேமமாலினி.  அதன் பிறகு 1968 இல் இந்தியில் சப்னோம்கி சவுதாகர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். படம் சுமாராகப் போனாலும் ஹேமமாலினியின் தோற்றமும், வனப்பும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு பல ஆண்டுகள் பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார் ஹேமமாலினி.

முதல் வாய்ப்பே தட்டிப்போய்விட்டதே என வருந்தாமல் தொடர்ந்து முயற்சித்து டாப் ஸ்டாராகவும் ஆனார் ஹேமமாலினி.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU

 

 

The post ஒதுக்கப்பட்ட ஹேமமாலினி, லேடி சூப்பர் ஸ்டார் ஆன அதிசயம்! appeared first on Touring Talkies.

]]>
வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்!: டாப்சி காட்டம்! https://touringtalkies.co/succeeding-actors-dominant-taapsee-who-beat-the-hindi-film-industry/ Mon, 19 Jun 2023 00:44:46 +0000 https://touringtalkies.co/?p=33608 இந்தி திரையுலகில் நடிகர் நடிகைகளை பாரபட்சமாக நடத்துவதாக ஏற்கனவே சர்ச்சைகள் உள்ளன. வாரிசு நடிகர் நடிகைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்பட்டது. நடிகை பிரியங்கா சோப்ராவும் தன்னை இந்தியில் இருந்து ஒதுக்கியதால் ஹாலிவுட் சென்றேன் என்று கூறியிருந்தார். வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினாலேயே மன உளைச்சலில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி இருந்தார். தற்போது டாப்சியும் இந்தி திரையுலக அரசியலை சாடி உள்ளார். இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், “இந்தியில் நடிகர் […]

The post வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்!: டாப்சி காட்டம்! appeared first on Touring Talkies.

]]>
இந்தி திரையுலகில் நடிகர் நடிகைகளை பாரபட்சமாக நடத்துவதாக ஏற்கனவே சர்ச்சைகள் உள்ளன. வாரிசு நடிகர் நடிகைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்பட்டது.

நடிகை பிரியங்கா சோப்ராவும் தன்னை இந்தியில் இருந்து ஒதுக்கியதால் ஹாலிவுட் சென்றேன் என்று கூறியிருந்தார். வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினாலேயே மன உளைச்சலில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி இருந்தார். தற்போது டாப்சியும் இந்தி திரையுலக அரசியலை சாடி உள்ளார்.

இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், “இந்தியில் நடிகர் நடிகைகளை பாரபட்சமாக நடத்துவது புதிய விஷயம் இல்லை. இங்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று பிரித்து பார்க்கும் நிலைமை இருக்கிறது. நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு இது தெரியும். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். சாதகமான நிலைமைகள் இல்லையென்றாலும் தொடர்ந்து சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவரவர் விருப்பம். வளர்ந்து விட்டால் யாரும் வெளியேற்ற முடியாது” என்றார்.

The post வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்!: டாப்சி காட்டம்! appeared first on Touring Talkies.

]]>
இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்! https://touringtalkies.co/cinema-sivaji-ganesan-thangapathakkam-remake-in-hindi-as-shakti-with-dilip-kumar-and-amitabh-bachchan/ Sat, 03 Jun 2023 05:53:06 +0000 https://touringtalkies.co/?p=33101 நாயகர்களுக்கு ஏற்பட, படங்கள் எப்படி ரீமேக் செய்யப்படுகின்றன என்கிற சுவாரஸ்ய தகவலை பத்திரிகையாளர் செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அவர், “தமிழில் தங்கப்பதக்கம் படத்தில் போலீஸ் கமிஷனர் சௌத்ரியா நடித்த சிவாஜிதான் ஹீரோ. அவரது மகனாக – வில்லனாக வரும் ஸ்ரீகாந்த்துக்கு காட்சிகள் குறைவு. இதே கதையை இந்தியில் ரமேஷ் சிப்பி, சக்தி என்ற பெயரில் ரீ மேக் செய்தார். அங்கே மகன் வேடத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அவரது கேரக்டரை வில்லனாக […]

The post இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்! appeared first on Touring Talkies.

]]>
நாயகர்களுக்கு ஏற்பட, படங்கள் எப்படி ரீமேக் செய்யப்படுகின்றன என்கிற சுவாரஸ்ய தகவலை பத்திரிகையாளர் செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

அவர், “தமிழில் தங்கப்பதக்கம் படத்தில் போலீஸ் கமிஷனர் சௌத்ரியா நடித்த சிவாஜிதான் ஹீரோ. அவரது மகனாக – வில்லனாக வரும் ஸ்ரீகாந்த்துக்கு காட்சிகள் குறைவு.

இதே கதையை இந்தியில் ரமேஷ் சிப்பி, சக்தி என்ற பெயரில் ரீ மேக் செய்தார். அங்கே மகன் வேடத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, அவரது கேரக்டரை வில்லனாக காட்டாமல், சந்திர்ப்ப சூழலால் தவறான வழிக்குச் சென்றதாக கதை மாற்றப்பட்டது. தவிர, இறுதியில் வில்லன்களை அவரே புரட்டி எடுப்பார்.

இந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது” என்றார் செல்வராஜ்.

 

The post இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்! appeared first on Touring Talkies.

]]>
டார்ச்சர்: இந்தித் திரையுலகைவிட்டு விலகிய நடிகை! https://touringtalkies.co/torture-the-actress-who-left-the-hindi-film-industry/ Fri, 02 Jun 2023 00:44:21 +0000 https://touringtalkies.co/?p=33043 பஞ்சாபி நடிகையான சோனம் பஜ்வா தமிழில், கப்பல், காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர், “இந்தியில் பாலா, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி போன்ற படங்களில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.  பஞ்சாப் திரையுலகில்   எனக்கு நல்ல இமேஜ் […]

The post டார்ச்சர்: இந்தித் திரையுலகைவிட்டு விலகிய நடிகை! appeared first on Touring Talkies.

]]>
பஞ்சாபி நடிகையான சோனம் பஜ்வா தமிழில், கப்பல், காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், “இந்தியில் பாலா, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி போன்ற படங்களில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.  பஞ்சாப் திரையுலகில்   எனக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. அதை கெடுத்துக்கொள்ள மனம் இல்லை. ஆகவே, இனி இந்தி படங்களில் நடிக்க வேண்டாம் என்று நானே விலகிவிட்டேன்” என்று சொல்லி இருக்கிறார்.

 

 

The post டார்ச்சர்: இந்தித் திரையுலகைவிட்டு விலகிய நடிகை! appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதியின் ‘மாநகரம்’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி! https://touringtalkies.co/vijay-sethupathi-starrer-maanagaram-hindi-remake-release-date-announcement/ Sat, 27 May 2023 02:55:34 +0000 https://touringtalkies.co/?p=32833 லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘மாநகரம்’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படம் இந்தியில் ‘மும்பைக்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸே, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.  சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி […]

The post விஜய் சேதுபதியின் ‘மாநகரம்’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘மாநகரம்’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படம் இந்தியில் ‘மும்பைக்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸே, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.  சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மும்பைக்கர்’ திரைப்படம் வருகிற ஜூன் 2-ம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

The post விஜய் சேதுபதியின் ‘மாநகரம்’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! https://touringtalkies.co/sridevis-daughter-in-the-hindi-remake-of-love-today-aamir-khan-son/ Fri, 26 May 2023 02:55:29 +0000 https://touringtalkies.co/?p=32810 தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி […]

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார்.

சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும் நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா! https://touringtalkies.co/after-25-years-jyothika-is-back-in-hindi/ Tue, 16 May 2023 04:40:55 +0000 https://touringtalkies.co/?p=32504 தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  பிறகு தனது கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். 36 வயதினிலே, ராட்சசி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. இந்த நிலையில் விகாஸ் பால் ஜோதிகா இயக்கத்தில்  அஜய்தேவ்கான் நடிக்கும் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். திரில்லர் படமான இது மும்பை, லண்டன் உள்ளிட்ட […]

The post 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  பிறகு தனது கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

36 வயதினிலே, ராட்சசி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

இந்த நிலையில் விகாஸ் பால் ஜோதிகா இயக்கத்தில்  அஜய்தேவ்கான் நடிக்கும் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார்.

திரில்லர் படமான இது மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளது.

ஜோதிகா கடைசியாக 1998-ல் வெளியான டோலி சாஜா கே ரக்னா என்ற இந்தி படத்தில் அக்ஷய் கன்னாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

 

The post 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா! appeared first on Touring Talkies.

]]>
வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்!: நீது சந்திரா ஆதங்கம்! https://touringtalkies.co/successor-actors-dominate-the-hindi-film-world-actress-neetu-chandra/ Tue, 04 Apr 2023 03:08:32 +0000 https://touringtalkies.co/?p=31270 நடிகை பிரியங்கா சோப்ராவும் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்தி பட உலகில் என்னை ஓரம்கட்ட ஒரு கும்பல் சதி செய்தது. அவர்கள் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனாலேயே இந்தி படங்களில் நடிக்காமல் ஹாலிவுட்டுக்கு போனேன்” என்றார். பிரியங்கா கருத்துக்கு கங்கனா ரணாவத், மீரா சோப்ரா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்தி நடிகை நீது சந்திராவும் இந்தி […]

The post வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்!: நீது சந்திரா ஆதங்கம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை பிரியங்கா சோப்ராவும் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்தி பட உலகில் என்னை ஓரம்கட்ட ஒரு கும்பல் சதி செய்தது. அவர்கள் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனாலேயே இந்தி படங்களில் நடிக்காமல் ஹாலிவுட்டுக்கு போனேன்” என்றார்.

பிரியங்கா கருத்துக்கு கங்கனா ரணாவத், மீரா சோப்ரா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்தி நடிகை நீது சந்திராவும் இந்தி பட உலக வாரிசுகள் ஆதிக்கத்தை கண்டித்துள்ளார்.

அவர் கூறும்போது, “இந்த பிரச்சினை ஒருவருக்கு மட்டும் இல்லை. எல்லோருக்குமே இதே நிலைமைதான் இருக்கிறது. சினிமா குடும்பத்தை சேர்ந்த வாரிசாக நீங்கள் இல்லை என்றால் பட வாய்ப்புக்காக போராட வேண்டும். ஏதேனும் வாய்ப்பு கிடைத்தாலும் அது நீண்ட கால தாமதத்துக்கு பிறகே கிடைக்கும். இதை பிரியங்கா உள்பட பலர் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி பகிரங்கமாக பேச யாரும் முன் வருவது இல்லை” என்றார்.

The post வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்!: நீது சந்திரா ஆதங்கம்! appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய சினிமாவை புகழ்ந்த காஜலுக்கு எதிர்ப்பு! https://touringtalkies.co/south-indian-cinema-is-better-than-hindi-kajal-aggarwal/ Sat, 01 Apr 2023 13:50:43 +0000 https://touringtalkies.co/?p=31176 தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “தென்னிந்திய சினிமாவில் நல்ல நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவைகள் உள்ளன. பணியாற்றுவதற்கான நல்ல சூழலும் இருக்கிறது. ஆனால் இந்தி திரையுலகில் அது இல்லை. திறமை இருந்தால் தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நான் பிறந்தது மும்பையில் என்றாலும் தென்னிந்திய திரையுலகில்தான் எனது சினிமா வாழ்க்கை […]

The post தென்னிந்திய சினிமாவை புகழ்ந்த காஜலுக்கு எதிர்ப்பு! appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “தென்னிந்திய சினிமாவில் நல்ல நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவைகள் உள்ளன. பணியாற்றுவதற்கான நல்ல சூழலும் இருக்கிறது. ஆனால் இந்தி திரையுலகில் அது இல்லை. திறமை இருந்தால் தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

நான் பிறந்தது மும்பையில் என்றாலும் தென்னிந்திய திரையுலகில்தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பம் ஆனது. தென்னிந்திய சினிமா துறையில் நட்புறவுடன் கூடிய நல்ல சூழ்நிலை உள்ளது. அங்கு திறமையான இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் இருக்கிறார்கள்.   தென்னிந்திய படங்களில் நல்ல கதையம்சம் உள்ளது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் இந்தியில் இல்லை” என்றார்.

காஜல் அகர்வால் கருத்துக்கு தென்னிந்திய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இந்தி ரசிகர்கள் அவரை கண்டித்து வருகிறார்கள்.

The post தென்னிந்திய சினிமாவை புகழ்ந்த காஜலுக்கு எதிர்ப்பு! appeared first on Touring Talkies.

]]>