Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சினிமா தியேட்டர்கள் – Touring Talkies https://touringtalkies.co Thu, 20 Oct 2022 16:50:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சினிமா தியேட்டர்கள் – Touring Talkies https://touringtalkies.co 32 32 தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்கள் திடீர் உயர்வு..! https://touringtalkies.co/a-sudden-increase-in-cinema-ticket-fees-in-tamil-nadu/ Thu, 20 Oct 2022 16:50:04 +0000 https://touringtalkies.co/?p=25753 தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாமலேயே திடீரென்று சினிமா தியேட்டர்களில்  டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுநாள்வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு இன்றிலிருந்து 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய்வரை வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 60 ரூபாய்வரை உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இந்த திடீர் உயர்வுக்கு அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் தியேட்டர்காரர்களே கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. […]

The post தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்கள் திடீர் உயர்வு..! appeared first on Touring Talkies.

]]>
தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாமலேயே திடீரென்று சினிமா தியேட்டர்களில்  டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுநாள்வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு இன்றிலிருந்து 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.

சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய்வரை வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 60 ரூபாய்வரை உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.

இந்த திடீர் உயர்வுக்கு அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் தியேட்டர்காரர்களே கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரி தமிழக அரசிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “தற்போது மல்டி பிளக்ஸ், மால் மற்றும் தனி தியேட்டர்களில்  மின்சார கட்டணம், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை ஒரே வகையில் உள்ளன. எனவே அனைத்தும் தியேட்டர்களுக்கும் டிக்கெட் கட்டணத்தை ஒரேவிதமாக நிர்ணயித்து வழங்க வேண்டும். அதேபோல் பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி தர வேண்டும்.

அதன்படி ஏசி வசதி கொண்ட தியேட்டர்களில் தற்போது வசூலிக்கப்படும் ரூ.4 கட்டணத்தை ரூ.10 எனவும்,  ஏசி அல்லாத தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ.2 கட்டணத்தை ரூ.5 ஆகவும் உயர்த்தி தர வேண்டும்.

பெரிய தியேட்டர்களை சிறு தியேட்டர்களாக மாற்ற பொது பணித்துறை அலுவலகத்தில் உரிமம் பெற்றால் போதும் என்ற முறையை கொண்டு வர வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் C படிவ உரிமையை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

இந்தக் கோரிக்கைகளுக்கு அரசின் பதில் என்னவென்று தெரியாத சூழலிலேயே தியேட்டர் உரிமையாளர்கள் தாங்களாகவே டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியிருப்பது பொது மக்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது.

அதேசமயம் இவர்கள் கோரிக்கை நடைமுறைக்கு வரும் முன்பே பல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதை ஏற்று அக்., 21 முதல் 27 வரை சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.

The post தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்கள் திடீர் உயர்வு..! appeared first on Touring Talkies.

]]>
“ஓடிடிகளுக்கான படங்களை தியேட்டருக்குக் கொண்டு வராதீர்கள்” – தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வேண்டுகோள் https://touringtalkies.co/dont-bring-films-for-otts-to-theatres-request-of-producer-rk-suresh/ Mon, 12 Sep 2022 08:33:58 +0000 https://touringtalkies.co/?p=24484 “ஒரு படத்தைத் தயாரிக்க முனையும்போதே அது ஓடிடிக்காகவா, அல்லது தியேட்டரில் வெளியிடவா என்று முடிவு செய்து தயாரிக்கும்படி” தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அட்வைஸ் செய்துள்ளார். இது குறித்து அவர் நேற்று ஒரு விழாவில் பேசும்போது, “நான் நடித்த ‘விசித்திரன்’ படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒரு கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த ‘மாமனிதன்’ படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய்தான் கிடைத்தது. ஆனால், அதுவே ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் […]

The post “ஓடிடிகளுக்கான படங்களை தியேட்டருக்குக் கொண்டு வராதீர்கள்” – தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வேண்டுகோள் appeared first on Touring Talkies.

]]>
“ஒரு படத்தைத் தயாரிக்க முனையும்போதே அது ஓடிடிக்காகவா, அல்லது தியேட்டரில் வெளியிடவா என்று முடிவு செய்து தயாரிக்கும்படி” தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அட்வைஸ் செய்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று ஒரு விழாவில் பேசும்போது, “நான் நடித்த ‘விசித்திரன்’ படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒரு கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த ‘மாமனிதன்’ படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய்தான் கிடைத்தது. ஆனால், அதுவே ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்திலேயே அதிக வசூல் செய்த படம் அதுதான்.

என்னிடம் படம் ரிலீஸ் செய்யச் சொல்லி கேட்டு வருபவர்களிடம் படத்தைப் பார்த்ததும் சில படங்களை “தியேட்டருக்கு வேண்டாம். ஓடிடிக்கு கொடுத்து விடுங்கள்” என சொல்லி விடுவேன். ஏனென்றால் ஓடிடிக்கு என எடுக்கும் படத்தை தியேட்டருக்கு தூக்கிட்டு போகக் கூடாது. படம் எடுக்கும்போதே எதில் திரையிட போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும்.

இங்கே எட்டு நடிகர்களுக்கு மட்டும்தான் தியேட்டர்களில் நல்ல புக்கிங் மற்றும் ஓப்பனிங் இருக்கிறது.  மாதாமாதம் எனது நிறுவனத்தின் வெளியீடாக ஒரு படமாவது வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன்தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்தேன். ஆனால் அது ஓரளவுக்குத்தான் போனது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்..” என்றார் ஆர்.கே.சுரேஷ்.

The post “ஓடிடிகளுக்கான படங்களை தியேட்டருக்குக் கொண்டு வராதீர்கள்” – தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வேண்டுகோள் appeared first on Touring Talkies.

]]>
செப்டம்பர் 16-ம் தேதி சினிமா டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே..! https://touringtalkies.co/on-september-16-the-cinema-ticket-fee-is-only-75-rupees/ Sat, 03 Sep 2022 06:58:25 +0000 https://touringtalkies.co/?p=24236 அமெரிக்காவில் திரையரங்கில் சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சமீப ஆண்டுகளாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தேசிய சினிமா தினம் கடைப்பிடித்து வருகிறது. இந்த வார இறுதியில் அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் 3 டாலருக்கு சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் தேசிய சினிமா தினம் கடைப்பிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16-ம் தேதி தேசிய சினிமா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐநாக்ஸ், பி.வி.ஆர்., சினிபொலிஸ் உள்ளிட்ட […]

The post செப்டம்பர் 16-ம் தேதி சினிமா டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே..! appeared first on Touring Talkies.

]]>
அமெரிக்காவில் திரையரங்கில் சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சமீப ஆண்டுகளாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தேசிய சினிமா தினம் கடைப்பிடித்து வருகிறது. இந்த வார இறுதியில் அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் 3 டாலருக்கு சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் தேசிய சினிமா தினம் கடைப்பிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16-ம் தேதி தேசிய சினிமா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஐநாக்ஸ், பி.வி.ஆர்., சினிபொலிஸ் உள்ளிட்ட மல்டி-ப்ளெக்ஸ் திரையரங்குகளும் இந்த தேசிய சினிமா தினத்தில் கலந்து கொள்கின்றன.

அதையொட்டி அன்று ஒரு நாள் மட்டும் நாடு முழுவதும் உள்ள தங்களது 4000 தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விலையை 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இருப்பினும், ஆன்லைன் தளங்கள் மூலம் முன் பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட் விலையுடன், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.

திரையரங்குகளில் சென்று வரிசையில் காத்திருந்து டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டும் 75 ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்குமாம்.

The post செப்டம்பர் 16-ம் தேதி சினிமா டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே..! appeared first on Touring Talkies.

]]>
தியேட்டர்களில் படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் நிபந்தனை https://touringtalkies.co/cinema-theatre-owners-put-some-conditions-for-movies-released-in-the-theatres/ Thu, 02 Sep 2021 07:51:38 +0000 https://touringtalkies.co/?p=17565 திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட புதிய நிபந்தனைகளை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா 2-வது அலையின் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன்-2-க்குப் பிறகு சமீபத்தில்தான் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்போதுவரையிலும் 80 சதவிகித தியேட்டர்கள் மூடப்பட்டுதான் உள்ளன. வரும் செப்டம்பர் 9-ம் தேதியன்றுதான் விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படமும் 10-ம் தேதியன்று ‘தலைவி’ படமும் திரைக்கு வரவிருக்கிறது. அன்றைக்குத்தான் தமிழகம் முழுவதும் அனைத்துத் திரையரங்குகளும் இயங்கும் என்று தெரிகிறது. இதற்கிடையில் திரையரங்குகளில் படங்களை […]

The post தியேட்டர்களில் படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் நிபந்தனை appeared first on Touring Talkies.

]]>
திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட புதிய நிபந்தனைகளை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா 2-வது அலையின் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன்-2-க்குப் பிறகு சமீபத்தில்தான் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்போதுவரையிலும் 80 சதவிகித தியேட்டர்கள் மூடப்பட்டுதான் உள்ளன.

வரும் செப்டம்பர் 9-ம் தேதியன்றுதான் விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படமும் 10-ம் தேதியன்று ‘தலைவி’ படமும் திரைக்கு வரவிருக்கிறது. அன்றைக்குத்தான் தமிழகம் முழுவதும் அனைத்துத் திரையரங்குகளும் இயங்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் திரையரங்குகளில் படங்களை வெளியிட புதிய நிபந்தனைகளை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஒரு மாதம் கழித்துதான் ஓடிடியில் படங்கள் வெளியாக வேண்டும். இதற்கான சான்றிதழை அவர்கள் முன்கூட்டியே கொடுத்தால்தான் அந்தப் படங்களை நாங்கள் தியேட்டரில் வெளியிடுவோம்.

ஓடிடியில் ஏற்கெனவே நேரடியாக வெளியிட்ட படங்களை நாங்கள் தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று இரண்டு முக்கிய முடிவுகளை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த திடீர் நிபந்தனை எதற்கெனில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் ‘தலைவி’ படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியானாலும் செப்டம்பர் 24-ம் தேதியன்று அத்திரைப்படம் ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இரண்டு வாரங்களே இடைவெளி இருப்பதால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து இந்தப் படத்தைப் பார்க்கத் தயங்கிவிட்டால் தங்களது வசூல் குறைந்துவிடுமே என்று தியேட்டர் உரிமையாளர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் இந்தத் திடீர் முடிவை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்களாம்.

‘தலைவி’ படக் குழு என்ன முடிவு எடுக்கப் போகிறதோ தெரியவில்லை..!

The post தியேட்டர்களில் படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் நிபந்தனை appeared first on Touring Talkies.

]]>
‘சூரரைப் போற்று’ – தியேட்டர்களில் வெளியாகிறது https://touringtalkies.co/soorarai-pottru-movie-will-release-on-theatres/ Thu, 26 Aug 2021 10:43:10 +0000 https://touringtalkies.co/?p=17353 நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்படலாம் என்று தெரிகிறது. நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பில் சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் ஓடிடியில் வெளியானாலும் படம் பார்த்தவர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் சிறந்த படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய படம் இதுதான்.  மேலும் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் கலந்து கொண்டு பரிசுகளை […]

The post ‘சூரரைப் போற்று’ – தியேட்டர்களில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று’ திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்படலாம் என்று தெரிகிறது.

நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பில் சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் ஓடிடியில் வெளியானாலும் படம் பார்த்தவர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் சிறந்த படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய படம் இதுதான்.  மேலும் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் கலந்து கொண்டு பரிசுகளை வென்றது.

ஓடியில் வெளியிட்டதால் அதிகமான மக்கள் இந்தப் படத்தை இப்போதுரையிலும் பார்க்காத சூழல்தான் இருந்து வருகிறது. இதைப் போக்குவதற்காக தற்போது 50 சதவிகிதம் ரசிகர்களுக்கு அனுமதி என்ற நிலையிலும் இந்த ‘சூரரைப் போற்று’ படத்தை திரையரங்குகளில் வெளியிடலாம் என்று அந்த பட நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதற்காக தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் 2டி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். மேலும் இந்தப் படத்தின் மூலம் வசூலாகும் பணத்தை அப்படியே தியேட்டர்காரர்களும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினரும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் புது மாதிரியான ஒரு சலுகையை சூர்யா தரப்பினர் முன் வைத்துள்ளனராம்.

தியேட்டர்காரர்கள் ஏற்கெனவே தங்களது வேண்டுகோளையும் மீறி இந்தப் படத்தை ஓடிடிக்கு கொடுத்ததினால் சூர்யா படங்களுக்கு மறைமுகமாகத் தடை விதித்துள்ளனர்.

“இந்தத் தடையால் எதிர்காலத்தில் தங்களது குடும்பத் திரைப்படங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக இந்தப் படத்தைத் தியேட்டர்காரர்கள் கைகளில் கொடுக்கிறார் சூர்யா…” என்கிறார்கள் திரையுலகத்தினர்.

சூர்யாவின் இந்தக் கோரிக்கை பற்றி, தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் மிக விரைவில் தங்களது சங்கத்தினரிடம் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.

The post ‘சூரரைப் போற்று’ – தியேட்டர்களில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு https://touringtalkies.co/actor-santhanam-support-to-release-films-on-ott-platforms/ Wed, 11 Aug 2021 08:21:47 +0000 https://touringtalkies.co/?p=16951 தற்போது தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் மிகப் பெரிய நடிகர், நடிகைகள் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் போக்கு நீடித்தால் இன்னும் சில நாட்களில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதையே மறந்துவிடுவார்கள். பின்பு தியேட்டர்களில் எந்தப் படத்தைப் போட்டாலும் கூட்டம் வராது என்கிறார் தியேட்டர் உரிமையாளர்கள். ஆனால், “இப்படி படங்கள் ஓடிடியில் வெளியாவது சரிதான்” என்கிறார் நடிகர் சந்தானம். இது குறித்து […]

The post OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு appeared first on Touring Talkies.

]]>
தற்போது தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் மிகப் பெரிய நடிகர், நடிகைகள் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் போக்கு நீடித்தால் இன்னும் சில நாட்களில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதையே மறந்துவிடுவார்கள். பின்பு தியேட்டர்களில் எந்தப் படத்தைப் போட்டாலும் கூட்டம் வராது என்கிறார் தியேட்டர் உரிமையாளர்கள்.

ஆனால், “இப்படி படங்கள் ஓடிடியில் வெளியாவது சரிதான்” என்கிறார் நடிகர் சந்தானம். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுவது அவ்வளவு சரியானதாக இல்லை. அதனால் ஓடிடியில் படங்கள் வெளியாவதில் தவறில்லை.

திரைப்படங்கள் கடவுளைப் போல.. இதில் தியேட்டர்கள் கோவில் போன்றவை.. ஓடிடிக்கள்தான் பூஜையறை. இதனால் ஒன்றும் பாதிப்பில்லை.

சினிமாவை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் துவங்கி போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள்வரையிலும் பல்லாயிரக்கணக்கான பேர் இந்த சினிமா தொழிலை நம்பியே உள்ளார்கள்.

தியேட்டர்களை தற்போது திறக்க முடியாத சூழல் உள்ளது என்பதால் அனைவரது நலனுக்காகவும் ஓடிடிக்களில் படங்களை வெளியிடுவதே சரியானதாக இருக்கும்…” என்று சொல்லியிருக்கிறார் சந்தானம்.

The post OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு appeared first on Touring Talkies.

]]>
திரையரங்குகளைத் திறக்க அனுமதி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை..! https://touringtalkies.co/request-to-the-chief-minister-for-permission-to-open-theaters/ Thu, 08 Jul 2021 10:59:02 +0000 https://touringtalkies.co/?p=16081 தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதி தரும்படி கேட்டனர். மேலும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயை தங்களது சங்கத்தின் சார்பில் முதலமைச்சரிடம் அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சுப்ரமணியம், “முதலமைச்சர் நிவாரண நிதியாக எங்களது சங்கத்தின் சார்பில் 50 லட்சத்திற்கான காசோலையை […]

The post திரையரங்குகளைத் திறக்க அனுமதி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

அப்போது கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதி தரும்படி கேட்டனர். மேலும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயை தங்களது சங்கத்தின் சார்பில் முதலமைச்சரிடம் அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சுப்ரமணியம், “முதலமைச்சர் நிவாரண நிதியாக எங்களது சங்கத்தின் சார்பில் 50 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினோம்.

திரையரங்க உரிமையாளர்களின் சிரமத்தை முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். தியேட்டர்களை விரைவில் திறப்பதற்கு அனுமதி தரும்படி கேட்டுக் கொண்டோம்.  முதல்வர் பணிவுடன் இதைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். திரையரங்குகளை திறக்க முதலமைச்சர் விரைவில் அனுமதி அளிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அரசு அளிக்கும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளைத் திறக்க தயாராக நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவிலேயே குறைவான கட்டணத்தோடு திரையரங்குகள் இயக்குவது தமிழகத்தில் மட்டும்தான். இந்தக் கட்டணம் போதுமானதாக உள்ளது.

திரையரங்குகளின் உரிமத்தை விரைவில் புதுப்பித்து தர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நிச்சயம் இதனைச் செய்து தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்…” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.

The post திரையரங்குகளைத் திறக்க அனுமதி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது https://touringtalkies.co/the-producers-association-has-imposed-conditions-on-the-release-of-films-in-theaters/ Fri, 02 Jul 2021 04:58:17 +0000 https://touringtalkies.co/?p=15924 கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன. வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கெடு […]

The post தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன.

வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கெடு விதித்துள்ளனர்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக் குழு கூட்டம் அந்தச் சங்கத்தின் தலைவரான ராமசாமியின் தலைமையில் நேற்று நடை பெற்றது. இதில் சில மு்க்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

தியேட்டர்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்கும் முறை கணினி மயமாக்க வேண்டும். அதன் வெளிப்படைத் தன்மையை தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தியேட்டரில் திரையிடப்படும் படங்களின் உரிமை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. இதனால் தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் வரும் வருமானம் தியேட்டர் உரிமையாளர்கள், புக்கிங் ஏஜென்ட் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து தர வேண்டும்.

தியேட்டர்களில் படங்களுக்கு இடையே வெளியாகும் விளம்பரங்களிலும் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பங்கு வேண்டும்.

ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை தீர்க்க, தியேட்டர்களின் பெயரிலேயே இனிமேல் வரி கட்ட வேண்டும். தனி நபர்களின் பெயர்களில் வரியைக் கட்டக் கூடாது.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க,  சிண்டிகேட் அமைத்து செயல்படும் முறையை தியேட்டர் உரிமையாளர்கள் கலைக்க வேண்டும்.

சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகும்போது, மூன்று வகையாக டிக்கெட்டுகளை விற்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் படங்களை வெளியிடும்போது, வி.பி.எப்., கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டோம்.

இது குறித்த முடிவுகளை தியேட்டர் திறப்புக்கு முன்பே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அரசிடம் முறையிட்டு இதற்குத் தீர்வு காண வழி செய்யப்படும்.

இந்தத் தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆக தியேட்டர்களைத் திறக்கலாம் என்று அரசு அனுமதியளித்தாலும் புதிய படங்கள் திரைக்கு வருவது இந்தப் பஞ்சாயத்துகள் முடிவுக்கு வந்தால்தான் தெரியும்.

The post தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
“ஓடாத தியேட்டருக்கு எப்படி சொத்து வரி கட்ட முடியும்?” – தியேட்டர் உரிமையாளர்கள் கேள்வி..! https://touringtalkies.co/how-can-a-non-running-theater-pay-property-taxes-theater-owners-questioned/ Sun, 27 Jun 2021 10:52:29 +0000 https://touringtalkies.co/?p=15813 “சினிமா தியேட்டர்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு மற்றும் வருடந்திர லைசென்ஸ் ஆகியவற்றில் சலுகைகள் வேண்டும்…” என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரான திருச்சி ஸ்ரீதர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து ஸ்ரீதர் இன்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், “தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 8 மாதங்கள்தான் திரையரங்குகள் திறந்திருந்தன. வசூலும் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கிறது. இந்த […]

The post “ஓடாத தியேட்டருக்கு எப்படி சொத்து வரி கட்ட முடியும்?” – தியேட்டர் உரிமையாளர்கள் கேள்வி..! appeared first on Touring Talkies.

]]>
“சினிமா தியேட்டர்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு மற்றும் வருடந்திர லைசென்ஸ் ஆகியவற்றில் சலுகைகள் வேண்டும்…” என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரான திருச்சி ஸ்ரீதர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீதர் இன்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில்,

“தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 8 மாதங்கள்தான் திரையரங்குகள் திறந்திருந்தன. வசூலும் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் வருடா, வருடம் திரையரங்கு உரிமையாளர்கள் கட்ட வேண்டிய சொத்து வரி மட்டும் அதே அளவில்தான் இருக்கிறது. இந்தக் கொரோனா லாக் டவுன் காலக்கட்டத்தை மனதில் வைத்து தமிழக அரசு எங்களது தியேட்டர்களுக்கான சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இயங்காத, செயல்படாத, வருவய் வராத நிலையில் தியேட்டர்காரர்கள் எங்கேயிருந்து வரி கட்டுவார்கள்..? தமிழக அரசு இதை மனதில் வைத்து எங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

தியேட்டர்களுக்கு வருடா வருடம் தரப்படும் லைசென்ஸ் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வருடா வருடம் தருவதற்குப் பதிலாக ஒரேயொரு முறை கொடுத்தாலே போதும் என்ற நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் 6 அரசுத் துறையினரிடம் சான்றிதழ் வாங்கி அதன் பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து அதன் பின்பு அவர் எங்களுக்கு அனுமதியை வழங்கி வருகிறார். இது தற்போதைய நடைமுறைப்படி அரசுக்கும், எங்களுக்குமே பெரும் சிரமத்தைத் தந்து வருகிறது. இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே மாயவரத்தில் இருக்கும் ஒரு திரையங்கு 13 மாதங்களுக்கு முன்பேயே லைசென்ஸை புதுப்பிக்க விண்ணப்பித்தும் இன்றுவரையிலும் அது கிடைக்கவில்லை. இன்னும் பல ஊர்களில் தியேட்டர்காரர்கள் லைசென்ஸை புதுப்பிக்க விண்ணப்பிக்கவே இல்லை.

தற்போதைய கொரோனா காலக்கட்டத்தினால், அரசு அலுவலகங்கள் முழு வீச்சில் செயல்படாத காரணத்தினாலும், வெளியில் நடமாட முடியாத சூழல் உள்ளதினாலும் தியேட்டர் அதிபர்கள் இதில் முனைப்புக் காட்ட முடியவில்லை.

தற்போது தமிழக அரசு தியேட்டர்களை திறக்கலாம் என்று அனுமதியளித்தாலும்கூட உரிமம் புதுப்பிக்கப்படாததால் பல ஊர்களில் தியேட்டர்களை திறக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது. எனவே அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தியேட்டர்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தியேட்டர்கள் திறக்கப்படாத இந்தச் சூழலிலும் தியேட்டர் அதிபர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார்கள். மேலும் தமிழகம் முழவதும் தியேட்டர்களில் பணியாற்றும் ஏஜெண்டுகளின் வாழ்க்கையும் இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு மற்றைய திரைப்பட அமைப்புகளுக்கு வாரியம் அமைத்து அவர்களுக்கு உதவி செய்வதுபோல, தியேட்டர் ஊழியர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும் பொதுவான ஒரு வாரியத்தை அமைத்து அவர்களுக்கும் வேண்டிய நலத்திட்ட உதவிகளை வழங்கும்படி எங்களது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்..” என்று கூறியுள்ளார்.

The post “ஓடாத தியேட்டருக்கு எப்படி சொத்து வரி கட்ட முடியும்?” – தியேட்டர் உரிமையாளர்கள் கேள்வி..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிதான் திறக்கப்படுமா..? https://touringtalkies.co/if-cinema-theatres-are-reopened-at-august-15/ Tue, 01 Jun 2021 13:58:30 +0000 https://touringtalkies.co/?p=15363 இந்தக் கொரோனா லாக் டவுன்-2-ன் தாக்கத்தினால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் பெரும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் பள்ளியில் அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டிய தருணம். பள்ளிக் கட்டணத்தைக் கட்ட வேண்டிய தருணம்.இந்த நேரத்தில் லாக் டவுன் செய்ததினால் பணத்தைப் புரட்டுவதற்கு அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரின் கேள்வியும் ஒன்றுதான். என்றைக்கு தமிழ்த் திரையுலகம் பழைய நிலைமைக்கு வரும்.. இதற்குத் தயாரிப்பாளர்கள் […]

The post சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிதான் திறக்கப்படுமா..? appeared first on Touring Talkies.

]]>
இந்தக் கொரோனா லாக் டவுன்-2-ன் தாக்கத்தினால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் பெரும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் பள்ளியில் அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டிய தருணம். பள்ளிக் கட்டணத்தைக் கட்ட வேண்டிய தருணம்.இந்த நேரத்தில் லாக் டவுன் செய்ததினால் பணத்தைப் புரட்டுவதற்கு அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது இவர்கள் அனைவரின் கேள்வியும் ஒன்றுதான். என்றைக்கு தமிழ்த் திரையுலகம் பழைய நிலைமைக்கு வரும்.. இதற்குத் தயாரிப்பாளர்கள் கேட்கும் எதிர்க் கேள்வி.. என்றைக்கு சினிமா தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதியளிக்கும் என்பதுதான்.

இப்போதைய நிலையில் தற்போதுதான் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறையத் துவங்கியுள்ளது. முழுமையாகக் குறைவதற்கு இன்னும் குறைந்தபட்சம் 6 மாதங்களாகிவிடும். ஆனால் இந்த மாதக் கடைசியில் அல்லது ஜூன் கடைசியிலாவது வெறும் ஆயிரம் பேருக்குள்ளாக தொற்றாளர்களின் எண்ணிக்கை சுருங்கிவிடும் என்று அரசுத் தரப்பு எதிர்பார்க்கிறது.

இதையடுத்து ஜூலை முதல் வாரத்தில் முக்கியமான துறைகளுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது.. ஜூலை 3-வது வாரத்தில் சின்னத்திரை உள்ளிட்ட அடுத்த முக்கியத் துறைகளுக்கு அனுமதி கொடுப்பது. ஆகஸ்ட் -2-வது வாரத்தில் சினிமா தியேட்டர்கள், மால்கள் உட்பட அனைத்திற்கும் அனுமதி கொடுப்பது என்று திட்டமிட்டுள்ளார்கள்.

இதனால் எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவது ஆகஸ்ட் 15-ம் தேதியாக இருக்கலாம் என்று திரையுலகத்தினரே கணித்திருக்கிறார்கள். அந்தத் தேதியில் எந்தப் பெரிய திரைப்படம் வரப் போகிறதோ தெரியவில்லை. அப்படி ஏதாவது வந்தால்தான் சினிமா தியேட்டர்கள் என்ற ஒன்று இருப்பதே மக்களுக்குத் தெரிய வரும்.

எது எப்படியிருந்தாலும் இந்தத் திட்டம்கூட கொரோனா நோய்த் தொற்றின் கைகளில்தான் உள்ளது. முழுமையாக கொரோனாவை விரட்டியடிக்கும்வரையிலும் எந்தத் தொழிலுக்கும் இங்கே உறுதியளிக்க முடியாத நிலைதான் உள்ளது.

The post சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிதான் திறக்கப்படுமா..? appeared first on Touring Talkies.

]]>