Thursday, April 11, 2024

சூர்ய வம்சம் 2 மற்றும் நாட்டாமை 2 வருமா: சரத்குமார் பதில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சரத்குமார் நடிப்பில் பெரும் ஹிட் அடித்த படங்கள், சூர்ய வம்சம் மற்றும் நாட்டாமை. இந்த இரு படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சரத்குமார் ஒரு பேட்டியில், “ஒரு வருடம் முன்பு, சூரிய வம்சம் 2 இப்போது வேலை செய்யுமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். இருந்தாலும், நிறைய யோசித்து, நல்ல கதை மற்றும் காட்சி அமைப்புடன் படத்தை எடுத்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையை, போர் தோழில் படத்தின் வெற்றி தந்துள்ளது. ஆர்.பி.சௌத்ரி இதன் தொடர்ச்சியை எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அது நன்றாக வொர்க் ஆகும் என்று நம்புகிறேன். பார்க்கலாம்” என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News