Thursday, April 11, 2024

மேலாடை அணியாமல் போட்டோ ஷூட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன் டிவியின் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கேப்ரில்லா சோசியல் மீடியாவில்  ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் சமீபத்தில் மேலாடை அணியாமல் போட்டோ சூட் நடத்தி, அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மைம் கலைஞரான இவர், ஐரா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

மேலாடையின்றி தனது படங்களை பதிவிட்ட அவர், ‘சுருங்கப் போகும் தோலுக்கு ஓராயிரம் விமர்சனம். சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்’ என்று கருத்தும் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘தமிழோடு பண்பையும் ஒழுக்கத்தையும் காத்தோடு பறக்க விடுறா’ என கண்டபடி சோசியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றினார்கள்.

அதை பார்த்து கொந்தளித்த கேப்ரில்லா பதிலடி கொடுத்திருக்கிறார். ‘திறமைக்கும் உடலுக்கும் சுய விருப்பத்திற்கும் வித்தியாசம் இருப்பது அறிவில்லாதவர்களுக்கு புரியாது. இவர்களின் கருத்து எனக்கு வேடிக்கையே! எனது கவி பாட எனது நாவு போதுமானது, உடல் அவசியமல்ல’ என செந்தமிழில் விளாசி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News