Thursday, April 11, 2024

வெப் தொடர் இயக்கும் சவுந்தர்யா ரஜினி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா, ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் இதில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இவர், ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இதில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இப்போது ஐஸ்வர்யா, வெப் தொடர் இயக்குகிறார். ஓடிடி தளம் ஒன்றுக்காக உருவாகும் இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News