Thursday, April 11, 2024

விஜய் வழியில் ஆர்.ஜே.பாலாஜி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம்  ஆகிய படங்களில் நடித்த ஆர்.ஜே. பாலாஜி, தற்போது ‘ரன் பேபி ரன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது ”எனது முதல் படத்தில் அரசியலும், 2-வது படத்தில் ஆன்மிகமும் இருந்தது. ரன் பேபி ரன் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

ஒரு இமேஜுக்குள் அடங்கிவிட கூடாது என்பதற்காக வித்தியாசமான கதைகளில் நடிக்கிறேன்” என்றார்.

மேலும், “சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. நான் படங்களில் நடிப்பது அதிர்ஷ்டம். தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்றார்.

சமீபத்தில்தான் விஜய், “நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.. எனக்கு நான்தான் போட்டி” என பேசியிருந்தார். அந்த ரூட்டில் போகிறாரோ ஆர்.ஜெ.பாலாஜி!  

- Advertisement -

Read more

Local News