Thursday, April 11, 2024

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சிறுவன் சாமுவேல்  மே 12ல் ரிலீஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குமரித் தமிழில் உருவான முதல் தமிழ் திரைப்படமான, சிறுவன் சாமுவேல், உலக திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.

திரைப்படத்தின் மையக்கரு கன்யாகுமரி மாவட்டத்தின் பிரத்யேகப் பேச்சு வழக்குத் தமிழின் சிறப்பையும் அந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சிறப்பையும் ஒருங்கே முன் வைக்கிறது.

90 களில் வாழ்ந்த சாம் மற்றும் ராஜேஷ் எனும் இரண்டு சிறுவர்களுக்கிடையேயான மனதைத் தொடும் நட்பும் இந்தப் படத்தில் பிரதான இடம் வகிக்கிறது. இத்திரைப்படம் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு அரசின் குழந்தைகள் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத் தக்கது.

வட்டார பேச்சு வழக்குத் திரைப்படமான இதில் கன்யாகுமரி வட்டார தமிழுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதன் தொன்மை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

படம் குறித்து இயக்குநர் சாது, “படத்திற்கான தொடக்க வேலைகள் கோவிட் பாண்டிமிக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் சிறுவன் அஜிதன் (சாமுவேல்) கன்யாகுமரி வட்டாரத் தமிழைக் கற்றுக் கொண்டு சிறப்பான நடிப்பைத் தரவேண்டி காரைக்குடியிலிருந்து வாரம் ஒருமுறை கன்யாகுமரிக்கு வந்து செல்ல வேண்டியதாயிருந்ததை மறக்க முடியாது.

இந்த விஷயத்தில் சிறுவர்களின் பெற்றோர்களின் ஒத்துழைப்பு படப்பிடிப்பை முடிக்க மிகுந்த உதவியாக இருந்ததனர்” என்றார்.

சிறுவன் சாமுவேல் திரைப்படம், பெய்ஜிங் சர்வதேச சிறார் திரைப்பட விழாவில் ஸ்லோவாகியா, ஜெர்மனி, சிலி, ஈரான், பிரேசில் மற்றும் லிதானியா நாட்டு சிறார் திரைப்படங்களுக்கு போட்டியாகத் திரையிடப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News