Thursday, April 11, 2024

“பணத்துக்காக அந்த பாடலில் நடிச்சேன்!” : சத்யராஜ் ஓப்பன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சத்தியராஜ் நாயகனாக நடித்த திரைப்படம் வண்டிச்சோலை சின்ராசு. மனோஜ் குமார் இயக்கிய இந்த திரைப்படம் 1994ம் ஆண்டு வெளியானது. படத்தில் சுகன்யா கதாநாயகியாக நடித்திருப்பார்.
இப்படத்தில் ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே’ என்கிற பாடல் இடம்பெற்று ஹிட் ஆனது.

பெண்கள், ஜீன்ஸ் பேண்ட், நீச்சல் உடை எல்லாம் அணியக்கூடாது என பாடல் வரிகள் இருக்கும்.

இந்த பாடல் பற்றி ஒருமுறை கூறிய சத்தியராஜ் ‘நான் நடித்திருந்தாலும் எனக்கு பிடிக்காத பாடல் அது. ஏனென்றால், நான் அடிப்படையில் ஒரு பெரியாரிஸ்ட். முற்போக்குவாதி. ஆகவே, பிற்போக்குத்தனம் கொண்ட அந்த பாடல் வரிகள் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால்,சம்பளம் வாங்கிவிட்டால் நடிக்க வேண்டியது என் கடமை என்பதால் நடித்தேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News