Wednesday, April 10, 2024

‘லியோ’ ட்ரெய்லர்: தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை, சில திரையரங்குகளிலும் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டது.  அந்த பட்டியலில்  சென்னை  ரோகிணி திரையரங்கும் இருந்தது. இதையடுத்து நேற்று மாலை முதலே  விஜய் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் குவிந்தனர். ஒரு கட்டத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு திரையரங்குக்குள் நுழைந்தனர்.

மேலும் தியேட்டர் இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் கோஷங்களை எழுப்பியும் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் தியேட்டர் முழுவதும் சேதமடைந்தது.

.

- Advertisement -

Read more

Local News