Wednesday, April 10, 2024

விமர்சனம்: ஜெயிலர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக  நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியாகி இருக்கிறது.

படம் எப்படி இருக்கிறது?

ஓய்வு பெற்ற ஜெயிலரான ரஜினியின் மகன், வசந்த் ரவி. இவர் காவல்  அதிகாரியாக இருக்கிறார்.  அவரை ஒரு கும்பல் கடத்திவைத்துவிடுகிறது. குறிப்பிட்ட ஒரு சிலையை திருடிக்கொண்டு வந்து கொடுத்தால்தான், மகனை விடுவிப்போம்  என்கிறது. ரஜினி என்ன செய்தார் என்பதுதான் கதை.

கதையில் புதுமை இல்லை என்றாலும் ரஜினியின் மாஸ் ரசிக்கவைக்கிறது. ஒட்டுமொத்த படத்தையும் அவர்தான் தூக்கி நிறுத்துகிறார். ரசிக்கவைக்கிறார்.

வில்லன் விநாயகம் மிரட்டுகிறார்.  நம்பிக்கைத் துரோகம் செய்த கூட்டாளிகளை, தலைகீழாக தொங்கவிட்டு ஆசிட் டேங்கிற்குள் முக்கிக் கொல்கிற  கொடூரம் நடுங்கவைக்கிறது.

தமிழ்நாட்டில் துவங்கும் கதை, ஆந்திரா, மும்பை என்று வெவ்வேறு களங்களுக்குச் செல்வதும் கூடுதல் சுவாரஸ்யம்.

பான் இண்டியா படம் என்பதால்,  சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால்  என்று, கர்நாடகா, பீகார், பஞ்சாப், கேரளா என்று பெரிய பெரிய  நடிகர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இதுவும் படத்துக்கு பலம்.

தெலுங்கு நடிகர் சுனிலை மட்டும் காமெடியனாக  பயன்படுத்தி இருக்கிறார்கள்.

வழக்கம்போல்,  நெல்சனின் பிளாக் ஹியூமர் ரசிக்கவைக்கிறது. எவ்வளவு சீரியசான காட்சியிலும் ஒரு காமெடி  டயலாக்கை கொண்டு வந்து சிரிக்கவைத்துவிடுகிறார்.  ஆகவே யோகிபாபு கூடுதலாக சிரிக்கவைக்கிறார்.

படத்தில் இடையிடையே ‘தலைவரு அலப்பறை’ என்ற வரிகளும் தீம் மியூசிக்கும் ரசிகர்களை கரகோசம் போட வைக்கிறது. படம் முழுவதும் அனிருத் பின்னணி இசையை இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். குறிப்பாக காவாலா பாடல் ஆட்டம்போட வைக்கிறது. ஆனால், ஆடிய தமன்னாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத காரெக்டர்தான். அதே போல் . ரம்யா கிருஷ்ணனுக்கும் – மிருனாளுக்கும் பெரிய ரோல் இல்லை.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், ரசிக்கவைக்கிறார்.  படத் தொகுப்பாளர் நிர்மல், கலை இயக்குநர் கிரண் அவரவர் பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

 

- Advertisement -

Read more

Local News