Thursday, April 11, 2024

விமர்சனம்: 2018

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர்: டோவினோ தாமஸ் நடிகை: தன்வி ராம், அபர்ணா பாலமுரளி டைரக்ஷன்: ஜூட் ஆண்டனி ஜோசப் இசை: வில்லியம் பிரான்சிஸ் ஒளிப்பதிவு : அகில் ஜார்ஜ்

கேரளாவில் 2018-ல் பெய்த பெரு மழை வெள்ளத்தை வைத்து உருவாகியுள்ள திரைப்படம்.

ராணுவ பணி பிடிக்காமல் ஊருக்கு ஓடி வந்த டோவினோ தாமஸ் ஆசிரியை மஞ்சுவை காதலிக்கிறார். லால் மற்றும் அவரது மகன் நரேன் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். இன்னொரு மகன் ஆசிப் அலி மாடலிங் ஆக விரும்புகிறார்.

தமிழ்நாட்டில் இருந்து லாரியில் கேரளாவில் உள்ள சமூக விரோத கும்பலுக்கு வெடிகுண்டு எடுத்துச் செல்கிறார், கலையரசன். இயற்கை இடர்பாடு நிவாரண மையத்தில் பணியாற்றுகிறார் குஞ்சாக்கோ போபன். செய்தி சேனலில் அபர்ணா பாலமுரளி வேலை செய்கிறார்.

இவர்கள் அத்தனை பேரும் மழை வெள்ளத்தில் சிக்கி,  அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் கதை.

டோவினோ தாமஸ் அற்புதமாக நடித்துள்ளார். வெள்ள நிவாரண முகாமில் தவிக்கும் கர்ப்பிணி பெண்ணையும், அவர் குழந்தையையும் ஹெலிகாப்டரில் ஏற்றி காப்பாற்றி நெகிழ வைக்கிறார்.

கணவனை பிரியும் முடிவில் இருந்த மஞ்சி, மனம் மாறி, அவருடன் சேர முடிவு எடுப்பது நெகிழ வைக்கிறது.  லால், நரேன் படகுகளுடன் சென்று வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்டு கதாபாத்திரத்துக்கு உயிர் அளித்துள்ளனர்.

முரட்டுத்தனமாக வரும் கலையரசன் மனம் மாறி, வெடிகுண்டுகளை வெள்ளத்தில் வீசுவதும், அம்மாவுக்கு போன் செய்து பேசுவதும்.. ரசிக்கவைக்கிறார்.

குஞ்சக்கோ போபன், அபர்ணா பாலமுரளி ஆகியோரும் சிறப்பான நடிப்பை அளித்துள்ளனர்.

வில்லியம் பிரான்சிஸ் இசை,  கில் ஜார்ஜின் கேமரா இரண்டும் படத்துக்கு பலம்.

ஆரம்பத்தில் தொடர்பு இல்லாமல் வரும் காட்சிகள் சலிப்பை தந்தாலும் போகப்போக காட்சிகளை ஒன்றிணைத்து விறுவிறுப்பு கூட்டுகிறார் இயக்குநர் ஜூட் ஆண்டனி.

 

- Advertisement -

Read more

Local News