Thursday, April 11, 2024

சூப்பர் ஸ்டார் பட்டத்தை மறுத்த ரஜினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த மூன்று தலைமுறைகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால், இந்த பட்டத்தை ஆரம்பத்தில் மறுத்திருக்கிறார் ரஜினி.

இது குறித்து ‘ரஜினி ரசிகர்கள் தளத்தில்’ குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில்,  “ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சிவகுமார், கமலஹாசன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அவர் முதன் முதலில் தனி ஹீரோவாக நடித்த பைரவி திரைப்படம் பைரவி. கலைஞானம் தயாரித்த இப்படம் 1978 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இந்த படத்தை சென்னை பகுதியில் வெளியிட்டவர் கலைப்புலி தாணு.  இவர், படத்தின் விளம்பரத்திற்காக சென்னை பிளாசா தியேட்டரில் 40 அடி கட் அவுட் வைத்தார். அதில் ரஜினிகாந்த் தோள் மீது ஒரு பாம்பை போட்டு அதற்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் இருந்தது. அதோடு, ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்’ என்ற வாசகத்தையும் பதிந்திருந்தார்.  இதுதான் முதல் முதலில் ரஜினியின் பெயருடன் சூப்பர் ஸ்டார் சேர்ந்த தருணம்.

அன்றைய காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்ததால் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தனக்கு தேவையில்லாத ஒன்று என்று நினைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இதை தாணுவிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் தாணு அடுத்த ப்ரிண்டிலேயே சிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி திரைப்படம் என்று ரொம்பவும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் போட்டிருந்தார்” என்று அந்தத் தளத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News