Wednesday, April 10, 2024

தயாரிப்பாளர் சங்கம் கண்டுக்கலை!: சித்தார்த் கோபம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சித்தா படத்தின் சக்சஸ் பிரஸ் மீட்டில் பேசிய சித்தார்த், “நான் நடித்து தயாரித்த இப்படத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பையும் பலனையும் கொடுத்துள்ளனர். முதல் வாரம் முடிந்து இரண்டாம் வாரத்திலும் இந்த படம் அடியெடுத்து வைத்துள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் வெற்றிப் பெற்றுள்ளது” என்றார்.

மேலும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சித்தா ப்ரஸ் மீட்டை, கன்னட அமைப்பினர் சிலர் வந்து தடுத்தது குறித்தும் பேசினார்.

அப்போது அவர், “நான் கர்நாடகாவில் ஒரு அரங்கில் பர்மிஷன் வாங்கித்தான் பிரஸ் மீட் நடத்தினேன். அன்றைக்கு எந்த பந்த்தும் நடக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் தான் பந்த் அறிவித்து இருந்தனர். ஒரு அமைப்பை சேர்ந்த 10 பேர் தான் உள்ளே வந்து மிரட்டுனாங்க, அவங்களுடன் தான் பிரச்சனை.

மத்தபடி  கன்னட சினிமா துறைக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.  அந்த பத்துபேரின் செயலுக்காக, சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் மாதிரி பெரியவங்க, மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

கன்னட மக்கள் என் படத்தை ரசித்து பார்க்கிறாங்க” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் பணம் போட்டு தயாரித்த படத்தை முடிந்த வரை மக்களிடம் கொண்டு செல்ல போராடி வருகிறேன்.  பாதிக்கப்பட்ட தயாரிப்பாளராக நான் இருக்கிறேன், இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த யாருமே என்னை தொடர்பு கொண்டு இது பற்றி பேசவில்லை. நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு இப்படி நடக்கக் கூடாது” என பேசினார்.

- Advertisement -

Read more

Local News