Thursday, April 11, 2024

பொ.செ. 2 : ட்விட்டர் விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலர், தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.

அவற்றில் இருந்து சில..

அதைவிட சிறப்பு: பொன்னியின் செல்வன் முதல் பாகம் எப்படி இருந்ததோ அதை விட சிறப்பாகவே இரண்டாம் பாகம் இருக்கிறது. எடுத்துக் கொண்ட கதைக்கு அனைவரும் நேர்மை செய்துள்ளனர். முதல் பாதி ஸ்லோவாக சென்றாலும் செகண்ட் ஹாஃப் சூப்பர்.

மணிரத்னம் மிரட்டல்: இயக்குநர் மணிரத்னம் வேறலெவல் மேக்ஸ். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்புக்காகவே பொன்னியின் செல்வன் 2 படத்தை தாராளமாக பார்க்கலாம்.

முதல் பாகத்தை முந்தியது: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை முந்தியது. பொன்னியின் செல்வன் நாவலுக்கு எந்தளவுக்கு நீதி செய்ய முடியுமோ அதனை மணிரத்னம் செய்துள்ளார். கிளைமேக்ஸில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு.. ஆனால், நாவல் படித்தவர்களுக்கு அது சற்றே ஏமாற்றத்தைக் கொடுக்கலாம்.

வேறமாறி வேட்டை: பார்ட் ஒன்னை விட பார்ட் 2 பயங்கரமா இருக்கு. கண்டிப்பா தியேட்டரில் அசந்து போவீங்க, மணி சார் வேறமாறி வேட்டை ஆடியிருக்காரு என படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News