Thursday, April 11, 2024

பொன்னியின் செல்வன்-2 டிக்கெட் ‘விறுவிறு’ முன்பதிவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இரண்டாம் பாகம் வருகிற 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராயின் வில்லத்தனங்கள், ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் கொலை செய்யப்படும் சம்பவம், போர்க்கள காட்சிகள் இடம்பெற இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் கதாபாத்திரங்களின் அறிமுகமாகவே இருந்தது என்றும் இரண்டாம் பாகத்தில்தான் கதை இருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் திரையரங்குகளில் படத்துக்கு முன்பதிவுகள் பெரிய அளவில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை வேறு படங்களுக்கு இல்லாத அளவில், பொ.செ.2 படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

- Advertisement -

Read more

Local News