Wednesday, April 10, 2024

“சூப்பர் ஸ்டாராகத்தான் சாவேன்!”: சொன்னார் அஜித்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க விஜய் முயல்கிறார் என சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர், நெட்டிசன்கள் பலர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அஜீத்தும் ஆசைப்பட்டார் என்று பழை வீடியோ ஒன்று பகிரப்படுகிறது.

அஜித் நடித்த ஜீ படம் வெளியான நேரத்தில் வார இதழ் ஒன்று அவரை பேட்டி கண்டது.

அப்போது அஜித், “நான் ரஜினிக்கு போட்டி என்று பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். அது தவறு. இருப்பினும் ‘யாருக்கு அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்கள் என்று ரஜினி சாரே கூறி இருக்கிறார். எனவே, யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படலாம் இல்லையா ? அதனால் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. அஞ்சினேயா படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நானும் விண்ணப்பம் போட்டுள்ளேன்.. நான் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்று சொன்னதை நிரூபிப்பேன். நான் சூப்பர் ஸ்டாராக தான் இறப்பேன்” என்றும் கூறியுள்ளார்.

இதை நெட்டிசன்கள் சிலர் பகிர, ரஜினி ரசிகர்கள் அஜித்தை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் அஜித் ரசிகர்கள் சிலர், “ஜி, ஆஞ்சநேயா படம் வெளியான காலகட்டத்தில் அஜித்துக்கு அப்படி ஒரு ஆசை இருந்திருக்கலாம். ஆனால் பின்னாளில் பக்குவப்பட்ட அவர், தனக்கு ரசிகர் மன்றமோ, பட்டங்களோ வேண்டாம் என்று வெளிப்படையாக அறிவித்து உள்ளார். பழைய வீடியோவை பகிர்ந்து சர்ச்சையை கிளப்புவது அநாகரீகம்” என பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News