Thursday, April 11, 2024

‘அந்த’ போட்டோவை தைரியமாக வெளியிட்ட நித்யாமேனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அரைகுறை ஆடையுடன் தங்கள் படங்களை வெளியிடும் நடிகைகளுக்கு, மேக் அப் இல்லாத போட்டோவை வெளியிட தைரியம் இருக்காது.

படப்பிடிப்புக்கு சென்றதும் மேக்கப் போட்டுக்கொள்வார்கள். சொந்த வேலையாக வெளியே செல்லும்போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் மேக்கப்புடனேயே இருப்பார்கள். இதற்காக ஒவ்வொரு நடிகையும் சம்பளம் கொடுத்து மேக்கப் கலைஞர்களை அருகிலேயே வைத்து இருக்கிறார்கள்.

வீட்டில் இருக்கும்போது மட்டுமே மேக்கப்பை கலைப்பது உண்டு. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் நித்யாமேனன் மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் பாராட்டியும், இன்னும் சிலர் நித்யாமேனனா இது? அடையாளமே தெரியவில்லையே என்று வியந்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

தைரியம்தான் உங்களுக்கு என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News