Thursday, April 11, 2024

மதனுக்கு மோகன்ஜி எச்சரிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் சில முக்கிய யூடியூபர்களின் ரகசிய வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, முக்தார் உள்ளிட்டோர் மது அருந்துவது, பேட்டிக்காக பேரம்பேசுவது எல்லாம் பதிவாகி இருந்தன.

இதில், அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவரான ஜெயம் எஸ்கே கோபி பற்றியும் வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து கோபிக்கும், மதன் ரவிச்சந்திரனுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் வெடித்தது.

இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரன் “எஸ்கே.  கோபியும் அவரது நண்பர்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  கோபியின் நண்பர் – திரைப்பட இயக்குநர் – மோகன்ஜி,    தமிழக பாஜக குறித்து கொச்சையாக பேசியது, திரைப்பட நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசியது, மத்திய ணை அமைச்சர் எல்.முருகன் குறித்து கீழ்த்தரமாக பேசியது, காயத்ரி ரகுராம், சௌதாமணி, கேசவ விநாயகம் ஆகியோர் குறித்து மதனிடம் தொலைபேசியில் பேசியது ஆகியவற்றை வெளியிடுவோம்” என்றார்.

இந்த நிலையில் மோகன்ஜி, “ வாங்க மதன்.. நானும் தயாரா தான் இருக்கேன் திருப்போருர் பற்றி பேச.. நிறைய பேசனும்” என்று சவால் விடுத்து இருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News