Thursday, April 11, 2024

மார்டர்ன் லவ் சென்னை: ஓ.டி.டி. தொடரின் டிரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமேசான் பிரைம் தளத்தில்  ‘மாடர்ன் லவ்’  என்ற தலைப்பில் பல்வேறு மொழிகளில் வெளியான ஆந்தாலஜி வெப் தொடர் வெற்றி பெற்றது. இதையடுத்து, ‘மாடர்ன் லவ் – சென்னை’  உருவாகி உள்ளது.

இத்தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.  இத்தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடல்கள் இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளன. இத்தொடரில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

3 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில் ஆறு அத்தியாயங்களின் காட்சித் துணுக்குகள் நமக்கு காட்டப்படுகின்றன. முதல் அத்தியாயமான ‘லாலாகுண்டா பொம்மைகள்’ பகுதியிலிருந்து சில பெரியவர்கள் ‘லாலாகுண்டா’ ஏரியாவின் பெருமைகளை சொல்வதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. தொடர்ந்து அசோக் செல்வனின் இமைகள், ரிது வர்மாவின் ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி’, அக்ஷய் சுந்தரின் இயக்கத்தில் ‘மார்கழி’, பாரதிராஜாவின் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’, தியாகராஜன் குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ ஆகிய பகுதிகளின் சிறு சிறு தொகுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.

இளையராஜாவின் குரலில் பின்னணியில் ஒலிக்கும் பாடல் மனதை வருடுகிறது. ‘இத்தனை ஆயிரம் வருஷமாகியும் நமக்கு புரியாம இருக்குறது மனுஷனோட மனசுதானப்பா’ என்று கிஷோர் பேசும் வசனம் ஈர்க்கிறது. பாசாங்கில்லாத காதல் கதைகளின் தொகுப்பாக ‘மாடர்ன் லவ் – சென்னை’ இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

 

 

- Advertisement -

Read more

Local News