Thursday, April 11, 2024

“எனக்கும் விஜய்க்குமான கெமிஸ்ட்ரி வேற லெவல்!”: த்ரிஷா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா, அவ்வப்போது முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றின்  விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட த்ரிஷாவுக்கு, பொன்னியின் செல்வன் மற்றும் ராங்கி திரைப்படங்களில் சிறப்பாக நடித்தற்காக இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை த்ரிஷாவுக்கு முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, லியோ பத்தி எதுவும் பேசக் கூடாது என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கார். 14 வருடத்திற்கு பிறகு விஜய் உடன் நடிக்கிறேன். ரசிகர்கள் எப்ப ஜோடி சேர்வீங்கனு 10 வருசமா கேட்டுகிட்டு இருக்காங்க. இந்த படம் முந்தைய படங்கள் போல் அல்லாமல் வேற மாதிரி இருக்கும். எங்களுக்குள் கெமிஸ்ட்ரி சூப்பராக வந்துருக்கு” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News